http://puthiyaulakam.com
கூகுள் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி.
நாம் எப்பொழுதாவது வெளியூருக்குச் சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் மின்னஞ்சலைப் பார்க்க முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் போட முடியாமல் போய்விடும்.
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டுப் பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
நீங்கள் எப்பொழுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு , ஏதேனும் தொழில் ரீதியான மின்னஞ்சலாக இருந்தால் நல்ல வாய்ப்புக்களையும் இழக்க நேரிடும்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் ஜிமெயிலின் Vacation Responder வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியைச் சேமித்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் நீங்கள் இல்லாத சமயத்தில் வரும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் Automatic பதில் அனுப்பி விடும். இதனால் மின்னஞ்சல் அனுப்பிவரும் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
Vacation Responder வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
அடுத்து Options ==> Mail Settings பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு வரும் விண்டோவில் Vacation Responder என்ற வசதி பகுதிக்கு
செல்லவும்.
அதில் On என்பதை கிளிக் செய்து Message என்ற பொக்சில் நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு போய் சேர வேண்டிய பதிலை Type பண்ணவும். பின் Only Send a Response to people in my contacts என்பதை கிளிக் செய்து Save Changes கொடுக்கவும்.
First Day – நீங்கள் மின்னஞ்சல் பார்க்க முடியாமால் போகும் திகதி.
Ends – இந்த வசதியை நிருத்தப்படவேண்டிய நாள்.
பிறகு அந்த கட்டத்தில் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்தால் உங்கள் மின்னஞ்சல் Contact List ல் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் Automatic Reply Email அனுப்பப்படும். வேறு மின்னஞ்சல்களுக்கு வந்தால் Automatic Reply அனுப்பாது.
அனைத்தும் தெரிவு செய்த பின்னர் கீழே உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். அதற்க்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கத்தில் இருக்கும்.
திரும்ப வந்து இதில் உள்ள Endnow லிங்கை அழுத்தினால் இந்த வசதி Off ஆகிவிடும்.
எங்கு சென்றாலும் எப்படியாவது குறிப்பிட்ட நேரத்திற்கொரு தடவை எனது மின்னஞ்சலைப் பார்த்துவிடுவேன் என்பவர்களுக்கு இது தேவையில்லை.
எனது மடிக்கணினியிலும், கைபேசியிலும் இண்டர்னெட் வசதி வைத்துள்ளேன் என்பவர்க்கும் இந்த செய்தி தேவை இல்லை.
இருந்தாலும் உறுதியான சரியான முடிவெடுத்திட கால அவகாசம் வேண்டுபவர்கள் நேரில் சந்திப்பதைத் தவிர்த்திட இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் இருந்துகொண்டு இல்லை என்று பதில் சொல்லி மாட்டிக் கொண்டு திண்டாடுவோர் நிலை ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கவும் தெரியவேண்டும்.
சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமலிருக்க உண்மையாய் இருப்பதே உத்தமம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.