Wednesday, November 2, 2011

2 ஆண்டுகளில் 14-வது முறையாக பெட்ரோல் விலை உயருகிறது


பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.48-ல் இருந்து ரூ.49 ஆக வீழ்ச்சி அடைந்து இருப்பதால் கச்சா எண்ணை இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் விற்பனையில் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.1.50 நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நஷ்டத்தை சரிக்கட்ட உள்ளூர் வரியையும் சேர்த்து லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்த எண்ணை நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

இன்னும் 2 வாரங்களில் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து 2 வருடத்தில் 14-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட உள்ளது.

2010 ஏப்ரல் 1-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.47.93 (டெல்லி விலை) ஆக இருந்தது. கடைசியாக இந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.66.84 ஆக உள்ளது. ரூ.1.82 உயரும் பட்சத்தில் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டர் ரூ.68.66 ஆக அதிகரிக்கும்.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டர் ரூ.70.82 ஆக உள்ளது. இனி அது 72.64 ஆக உயரும். டெல்லியில் கடந்த 2 ஆண்டில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை நிலவரம் வருமாறு:-

2010 ஏப்ரல்- ரூ.47.93 ஜூன்- ரூ.51.43 செப்- ரூ.51.56 செப்- ரூ.51.83 அக்- ரூ.52.59 நவ- ரூ.52.59 நவ- ரூ.52.91 டிச- ரூ.55.87 2011 ஜன- ரூ.58.37 மார்ச்- ரூ.58.37 மே.- ரூ.63.37 ஜூலை- ரூ.63.70 செப்- ரூ.66.84.

நன்றி :-மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.