Monday, October 10, 2011

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய "மேஜிக் புல்லட்'

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய "மேஜிக் புல்லட்' என்ற பொருளை பிரிட்டனைச் சேர்ந்த நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மிகவும் நுண்ணிய கரையக்கூடிய கொழுப்பால் ஆன இந்தப் பொருள், உடலில் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை துல்லியமாகக் கண்டறிய உதவும்.

இது குறித்து அக்குழுவின் தலைவரும், அல்ட்ரா சவுண்ட் நிபுணருமான டாக்டர் மெலிஸô மாதர் கூறியது: "நானோ டிரான்ஸ்டியூசர்ஸ்' என்ற எளிதில் கரையக்கூடிய கொழுப்பால் ஆன பொருளை உருவாக்கியுள்ளோம்.இந்தப் பொருளை ரத்தத்தில் செலுத்தி, மின் சக்தியை அளிக்கும்போது, அவை ஒலி அதிர்வை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் டாக்டர்கள் புற்றுநோய் உருவாகியுள்ள பகுதியை கண்டறியலாம்.

தற்போது பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளின் மூலம் கட்டி பெரிதாக இருந்தால்தான் புற்றுநோயை கண்டறிய முடியும். ஆனால், "மேஜிக் புல்லட்' பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் கட்டி மூலக்கூறு அளவில் சிறியதாக இருக்கும்போதே கண்டறியலாம்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இப்புதிய தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம்.இப்புதிய தொழில்நுட்பம், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார் மெலிஸô மாதர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.