Thursday, October 20, 2011

அடுத்த தேர்தலுக்குள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைக் கொண்டுவரப் பாடுபடுவதைக் குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும்.

http://viruvirupu.கம

கனடாவிலிருந்து ரிஷி வரிந்து கட்டிக்கொண்டு தமிழக- இந்திய அரசியலை விளாசித் தள்ளுகின்றார். உண்மைத் தமிழனை நினைவுக்குக் கொண்டு வருகின்றது இவரது எழுத்து. தலைப்பிடுவதில் காட்டிடும் அக்கறைக்கு ஓர் உதாரணம்.

ஜெயிலில் இருந்து, பெயிலில் வந்த நேரு, திருச்சி வெயிலில் ஜொலிக்கிறார்!

இன்று வெளிவரவிருக்கும் திருச்சி இடைத் தேர்தல் குறித்த அவரது கருத்தினை அப்படியே குறிப்பிட்டுள்ளேன்.

திருச்சி: இந்தியா:
கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் முடிவு இன்று வெளியாக உள்ளது. தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும், அ.தி.மு.க. சார்பில் பரஞ்சோதியும் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் நடைபெற்றது, இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான நேரடிப் போட்டி என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளாட்சி மட்டங்களில் செல்வாக்கு எப்படி இருந்தாலும், சட்டசபை தேர்தல்களின் திருச்சி மாவட்டம் ஒருகாலத்தில் தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. ஆரம்ப நாட்களில் தி.மு.க.வில் செல்வாக்காக இருந்த அன்பில் தர்மலிங்கம், திருச்சி மாவட்டத்தில் ஒரு செல்வாக்கு வட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியிருந்தது.

அந்தத் தேர்தலில் தி.மு.க.வால் கைப்பற்ற முடியாதுபோனவை இரண்டே இரண்டு தொகுதிகள்தான். ஒன்று ஸ்ரீரங்கம். மற்றையது மருங்காபுரி. 2011 ஏப்ரல் தேர்தலின்போது, ஸ்ரீரங்கம் தொகுதியை தனது தொகுதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார் ஜெயலலிதா. மருங்காபுரி தொகுதி, மணப்பாறைக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டு விட்டது.

2011 ஏப்ரல் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்து, தி.மு.க.வை அதிர வைத்தது. ஒரேயொரு தொகுதியையே தி.மு.க. கூட்டணியால் கைப்பற்ற முடிந்தது.

திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி ஆகிய 8 தொகுதிகளும் அ.தி.மு.க. கூட்டணிக்குச் செல்ல, தி.மு.க. ஜெயித்தது லால்குடி தொகுதியில் மட்டுமே!

அந்தத் தேர்தலில் தி.மு.க.வின் ‘சர்வ வல்லமை பொருந்திய மாண்புமிகு’ நேரு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரியம்பிச்சையிடம், சுமார் 7,000 வாக்குகளால் தோல்வியடைந்தார். நேருவை ஜெயித்த மரியம்பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த இடத்தில் ஒரு திருப்பமாக, கடந்த மே மாதம் சென்னைக்குச் செல்லும் வழியில் லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தார், அமைச்சர் மரியம்பிச்சை.

அதற்காக நடாத்தப்படும் இடைத்தேர்தல் முடிவுதான் இன்று வெளியாகவுள்ளது.

இரு கட்சிகளுக்குமே இந்தத் தேர்தலில் ஜெயிக்க வேண்டியது கௌரவப் பிரச்சினை. அத்துடன், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் ஜெயிக்க முடியுமா என்று டெஸ்ட்-ரன் பண்ணிப் பார்க்கும் சோதனை முயற்சியும்கூட!

• படித்தது, பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.