Tuesday, October 18, 2011

இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் முனைவர் ஆ. கந்தையா காலமானார்


பிறப்பு
இறப்பு
தேசியம்
அறியப்படுவது
எழுத்தாளர், தமிழறிஞர், மொழிபெயர்ப்பாளர்
கல்வி
PhD (லண்டன் பல்கலைக்கழகம்)

BA (சென்னை பச்சையப்பன் கல்லூரி)
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி(பலாலி)

இந்துக் கல்லூரி(யாழ்ப்பாணம்)
தொழில்
பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், மொழிபெயர்ப்பாளர்
பெற்றோர்
சிவகாமி
ஆறுமுகம்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்
சுதர்சன், தர்சினி

ஆ. கந்தையா (மார்ச் 19, 1928 - அக்டோபர் 3, 2011) ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்தவர்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் முனைவர் ஆ. கந்தையா (84) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திங்கள்கிழமை (அக். 3) காலமானார். இவர் இலங்கை எழுத்தாளர் மறவன்புலவு சச்சிதானந்தனின் சகோதரர் ஆவார்.
காலஞ்சென்ற முனைவர் ஆ.கந்தையா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர்.
இவர் கொழும்பு இந்துக் கல்லூரி, பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள் முதலானவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். லண்டன் மற்றும் சிட்னி பல்கலைக்கழகங்களிலும் இவர் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 25-க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.

தற்போது சிட்னி நகரில் வசிந்து வந்த கந்தையா, கடந்த வாரம் கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் திங்கள்கிழமை மதியம் காலமானார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.