Sunday, October 9, 2011

பென்குயின் மனிதர்

பெல்ஜியம் நாட்டிலுள்ள 79 வயது மனிதர் ஆல்பிரட் டேவிட். 1968-ம் ஆண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் இவரின் கால்கள் சிக்கிக் கொண்டன. இதனால் இவரால் வேகமாக நடக்க முடியவில்லை. பென்குயின் போன்றே அசைந்து அசைந்து நடக்கத் தொடங்கினார்.

இவரது நண்பர்கள் ஆல்பிரட்டை, "மிஸ்டர் பென்குயின்' என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினார்கள். இது பிடித்துப்போகவே தனது நடை, உடை, பாவனை என அனைத்தையும் பென்குயின் போன்றே மாற்றினார். பென்குயின் சம்பந்தப்பட்ட பொம்மைகள், படங்கள், புத்தகங்கள் என வீட்டையும் பென்குயின் அருங்காட்சியகம் போன்று அமைத்துள்ளார்.

இறந்த பின்பு அன்டார்ட்டிகா கண்டத்தில் பென்குயின்கள் அதிகம் வாழும் இடத்தில் பென்குயின் வடிவிலான சவப்பெட்டியில், பென்குயின் போன்று உடையணிவித்து, தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.