Saturday, October 1, 2011

ப.சிதம்பரத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தான் பிரச்சினை.




உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரத்திற்கு தெரிந்து தான் அனைத்தும் நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதை தீர விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும். ஆனால், எனக்கு ப.சிதம்பரம் மீது நம்பிக்கை இருக்கிறது என்று பிரதமர் கூறி இருப்பதில் இருந்து இப்பிரச்சினையை திசை திருப்ப முயற்சி நடக்கிறது.

பிரதமருக்கு ப.சிதம்பரம் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. ப.சிதம்பரத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தான் பிரச்சினை.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்திற்கும், அவருடைய மேல் இடத்திற்கும் உள்ள தொடர்புகளை மறைக்க முயற்சி நடக்கிறது. இது பற்றிய பிரச்சினை முடியும் வரை ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்.

வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ள நஷ்டஈடு மிகவும் குறைவாக உள்ளது. அவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட ரூ. 663 கோடி மதிப்பில் திட்ட அறிக்கையை கேரள அரசு தயாரித்துள்ளது. இதை உச்சநீதி மன்றம் அமைத்த உயர்மட்டக்குழுவிடம் சமர்ப்பிக்க முயற்சி செய்கிறது. இது குழுவின் ஆய்வை திசைதிருப்பும் முயற்சி.

முல்லை பெரியாறில் உள்ள அணையின் பலம் பற்றி ஆய்வு செய்வதே அந்த குழுவிற்கு அளிக்கப்பட்ட பணி. எனவே கேரள அரசின் திட்ட அறிக்கையை உயர்மட்டக்குழு ஏற்க கூடாது. இதை தமிழக அரசு குழுவிடம் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.