Monday, October 17, 2011

வேலை வாய்ப்புக் கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை

உலக நாடுகளில் சில நிறுவனங்களின் ஆதிக்கப் போக்கினால் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. மேலும் அரசாங்கங்களும் செலவுகளைக் குறைப்பதற்காக மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிறுத்தி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டம் மெல்ல மெல்லப் பரவித் தற்போது பெரும்பாலான நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள 82 நாடுகளில் இப்போராட்டம் பரவியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் கடந்த மே 15-ந் தேதி இந்த போராட்டம் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து நேற்று இத்தாலி தலைநகர் ரோம், லண்டன், சூரிச், சியோல், சிட்னி, டோக்கியோ, ஹாங் காங், புகாரஸ்ட் உள்ளிட்ட 951 நகரங்களிலும் பேரணி நடந்தது. இந்த நகரங்களில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலை யில் ரோம் நகரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது

பேரணியில் பங்கேற்றவர்கள் ரோட்டில் சென்றவர்கள் மீது கல்வீசித் தாக்கினார்கள். கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து நொறுக்கினார்கள். வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினார்கள். வன்முறை சம்பவத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.

வன்முறையை அடக்கப் போலீசார் கடுமையாகப் போராடினார். லண்டனில் நடந்த பேரணியில் விக்கிலீக் தலைவர் ஜூலியன் அசாங்கே கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டம் அமெரிக்காவில் வலுத்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி முதல் நியூயார்க் நகரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று டைம் சதுக்கத்தில் கூடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 comments:

  1. எமது வலைத்தளத்தில் தங்களது கருத்து கண்டு மகிழ்ந்தோம்..

    அருமை.. அருமை நண்பரே... உங்களைப்போலவே நாமும் ஆதரவற்ற அனைவருக்குமே உதவும் எண்ணத்துடனே இருக்கின்றோம்.. எங்கள் குழு வேலை வாய்ப்பை தேடி அலைபவர்களுக்கு வேலை வாய்ப்பையும், தமிழில் அதிகமாக வலைப் பதிவுகளை உருவாக்கிடவே திட்டமிட்டுள்ளோம்..

    //பல பதிவர்களின் வாழ்க்கைத்தரம் நன்கு உயர்ந்திருப்பதாகவே கருதுகின்றேன்//

    தங்களை போல் பதிவர்களில் சிலர் மட்டுமே தங்களின் பொருளாதார வளத்தை பெற்றிருக்க கூடும். பெரும்பாலான பதிவர்கள் தங்கள் அலுவலகங்களில் சொந்தமாக கணிணி கூட இல்லாமல் கிடைக்கின்ற சொற்ப நேரத்தில் பதிவுகளை இடுகின்றனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமல்லவா..? எங்கள் குழுவும் கூட அப்படிப்பட்ட இளைஞர்களின் பிரதிநிதிகள் தான். தமிழையும் வளர்ப்போம்.. தமிழ் இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ப்போம்..

    பொழுது போக்கிற்காக வலைத் தளத்தை சமூக தளங்களை போல் உபயோகப் படுத்தும் ஒரு சிலரை கண்டு எடை போடுவது " பாலின் எடையினை பரவிக்கிடக்கும் ஆடையின் மூலம் கணக்கிடுவதாகவே தோன்றும்" என்பதே எங்களது கருத்து ஆகும்.

    உங்களது மேலான கருத்துகளை இரு கரம் கூப்பி வரவேற்று பெருமிதம் கொள்கின்றோம்...

    நன்றிகள் பல!!!!

    ( ஒரு சிறிய வேண்டுகோள் : தங்களின் வலைப்பூவில் சராசரியாக எத்தனை வாசிப்பாளர்கள் வருகை தருகின்றனர் என்பதை கூற இயலுமா..? எங்களது தள வடிவமைப்பாளர்களுக்கு கணக்கெடுப்பிற்கு உதவும் படி இருக்கும். )

    ReplyDelete

Kindly post a comment.