Sunday, September 11, 2011

தேடியந்திர பட்டாம்பூச்சி.

கூகுலை விட்டால் வேறு தேடியந்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்.அத்தகைய அப்பாவிகள் இணைய உலகில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை.அதே போல கூகுலை விட சிறந்த தேடியந்திரம் கிடையாது என நினைப்பவர்களை அடி முட்டாள் என்று சொல்லலாம்.இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் கணிசமாகவே உள்ளனர்.

கூகுல் மிகச்சிறந்த தேடியந்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் கூகுலை விட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்வதற்கில்லை.இணைய உலகில் பெரும்பாலானோரின் தேடல் கூகுலில் துவங்கி கூகுலிலேயே முடிவடைகிறது என்ற போதிலும் பல்வேறு சூழலில் கூகுலைத்தவிர வேறொரு தேடியந்திரத்தில் தேட வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதற்கேற்ப பல்வேறு மாற்று தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன.கூகுல் போல் அல்லாமல் தேடப்படும் குறிப்பிட்ட வகையில் மட்டும் தேட விரும்பினால் ஸ்லேஷ் போட்டு அதற்குறிய குறிச்சொல்லை பயன்படுத்தி முடிவுகளை வடிக்கட்டி கொள்ளும் தேடியந்திரமாக பிளக்கோ திகழ்கிறது.

டக் டக் கோ தேடியந்திரம் கூகுலைவிட சிறந்த முறையில் முடிவுகளை முன்வைக்கிறது.பலரும் அறிந்திருக்ககூடியது போல ஆஸ்க் தேடியந்திரம் கேள்விகள் மூலம் தகவல்களை பதில்களாக தேட உதவுகிறது.
விக்கி தகவல்களை விக்கி பீடியாவிலேயே தேடிக்கொள்ளலாம்.விக்கி தகவல்களுக்கென்று தனி தேடியந்திரமும் உள்ளது.திரைப்படம் சார்ந்த தகவல்கள் தேவை என்றால் இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் தளம் இருக்கவே இருக்கிறது.

புகைபடங்களுக்கென்று தனியே தேடியந்திரங்கள் உள்ளன.இப்போது ஆர் எஸ் எஸ் எனப்படும் செய்தியோடை தகவல்களை தேடித்தரவும் தனி தேடியந்திரங்கள் வந்து விட்டன.

இவற்றை தவிர குறிப்பிட்ட வகையான இணையதளங்களில் மட்டும் தேட கைகொடுக்கும் தேடியந்திரங்கள்,வெர்டிகல் தேடியந்திரங்கள்,மெட்டா தேடியந்திரங்கள்,காட்சிரீதியிலான தேடியந்திரங்கள் என்று பலவகை தேடியந்திரங்கள் இருக்கின்றன.இவற்றோடு கூகுலின் பிரதான போட்டியாளர் என்று சொல்லப்படும் பிங்,மற்றும் நீண்ட நாள் போட்டியாளரான யாஹூ ஆகியவையும் இருக்கின்றன.

கூகுலில் தேடியும் எதிர்பார்த்த தகவல்கள் கிடைக்காத போது அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்படும் போது இந்த மாற்று தேடியந்திரங்களின் பக்கம் தான் போகவேண்டும்
.
இணைய தேடல் என்பது கூகுலோடு முடிந்து விடுவதில்லை என்று அறிந்தவர்கள் தங்கள் தேவைக்கேற்ப வேறு தேடியந்திரங்களையும் பயன்படுத்துவதுண்டு.ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் வசதியை கொண்ட தேடியந்திரங்களும் கூட இருக்கின்றன.கூகுல் முடிவுகளோடு மற்ற தேடியந்திர முடிவுகளளை ஒப்பிட்டி பார்க்க உதவும் தேடியந்திரங்களும் இருக்கின்றன.

மாற்று தேடியந்திரங்களில் என்ன பிரச்சனை என்றால் அவற்றை அடிக்கடி மறந்துவிட நேரலாம்.அதோடு ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடிப்பார்ப்பது சிக்கலானதாகவும் இருக்கலாம்.இந்த குறையை போக்கும் வகையில் பவுன்ஸ் என்னும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது.

பவுன்ஸ் தேடியந்திரத்தை தேடல் பட்டாம்பூச்சி என்றும் சொல்லலாம்.காரணம் இது ஒரு தேடியந்திரத்தில் இருந்து இன்னொரு தேடியந்திரத்திற்கு தாவிச்சென்று எல்லா தேடிய்ந்திரங்களிலிம் தேடிப்பார்க்க உதவுகிறது.அதிலும் ஒரே பக்கத்தில் இருந்தபடு தேடல் உலகம் முழுவதும் உலா வர கைகொடுக்கிறது.

இத்தனைக்கும் பவுன்ஸ் தேடியந்திரத்தை தனியே பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.டூல் பார் போல இதனை டவுண்லோடு செய்து கொண்டால் போதும் இது உங்கள் பிரவுசருக்குள் குடி புகுந்துவிடும்.அதன் பிறகு எப்போதெல்லாம தேடுகிறீர்கள் அபோதெல்லாம் இது தலையை காட்டும்.இல்லை இல்லை கீழிலிருந்து எட்டிப்பார்க்கும்.

அதாவது தேடல் முடிவுகளின் கீழ் எட்டிப்பார்க்கும்.அதில் பல்வேறு தேடியந்திரங்களின் ஐகான்கள் வரிசையாக இருக்கும்.கூகுல் முடிவுகள் கீழ் இந்த ஐகான்களை காணலாம்.கூகுல் முடிவு தவிர வேறு எந்த தேடியந்திர முடிவு தேவைப்பாலும் சரி அதற்கான் ஐகானில் கிளிக் செய்தால் போதும் அந்த முடிவுகள் தோன்றும்.

இப்படியாக ஒரு தேடியந்திரத்தில் இருந்து இன்னொரு தேடியந்திரத்துக்கு தாவிக்கொண்டே இருக்கலாம்.அவரவர் தேவைக்கேற்ப எந்த தேடியத்திற்கு வேண்டுமானாலும் தாவலாம்.தேடியந்திர முடிவுகளை ஒப்பிட்டும் பார்த்து கொள்ளலாம்.

இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ற வகையான தேடியந்திரங்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதற்காக இணைய உலகில் உள்ள அநேக தேடியந்திரங்களையும் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.
கூகுல் உட்பட எந்த தேடியந்திரமும் ஒரு சதவிகிதத்தற்கு மேலான இணைய தகவல்களை பெற்றிருக்கவில்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த தேடியந்திர பட்டாம்பூச்சியின் முக்கியத்துவத்தைத்  தானாகவே புரிந்து கொள்ளலாம்

இணையதள முகவரி;http://www.boounce.com/

எல்லாப்  புகழும்  சிம்மனுக்கே.        http://cybersimman.wordpress.com/

 இண்ட்லியில் இன்று  பிரபலமானது. அதற்கு முன்பே பலருக்கும்  புதிய தகவல்கள் சென்றடையட்டும் என்ற நோக்கில் மீள்பதிவு செய்துவிட்டேன். சிம்மன் ஏற்றுக்கொள்வார் என்றே கருதுகின்றேன். 

1 comments:

  1. arumai... thedu iyanthirangkal parri arinthu en madamaiyinai pookkinen... vaalththukkal

    ReplyDelete

Kindly post a comment.