Sunday, September 18, 2011

மக்கட்பணியில் சிறந்தவர்கள் மதவாதிகளா? அரசியல்வாதிகளா?


ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு மாதா அமிர்தானந்த மயி ரூ.4.7 கோடி (1 மில்லியன் டாலர்) வழங்கியுள்ளார்.

மதா அமிர்தானந் த மயி மடத்தின் "எம்பெரசிங் தி வோர்ல்டு' அமைப்பு மூலம் இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மியாகி மாகாண ஆளுநர் யோஷ்கிகிரோ முராயிடம் இதற்கான காசோலையை சுவாமி பூர்ணாமிர்தானந்தா வழங்கினார்.

மியாகி சிறுவர் கல்வி நலநிதிக்கு இத்தொகை வழங்கப்பட்டது. நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டு அதிகாரிகளும், மடத்தைச் சேர்ந்தவர்களும், தூதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.1990-ம் ஆண்டு முதல் டோக்கியோ, ஒசாகா, சாப்போரா உள்ளிட்ட நகரங்களில் மாதா அமிர்தானந்த மயி மடத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொள்வது வழக்கம்.


எனக்குத் தெரிந்த மனிதாபிமானி ஒருவரிடம் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேட்டால், எனக்குக் கடவுள் உண்டு; மதம் கிடையாது என்று கூறுவார். அதற்கும் ஒரு படி மேலே சென்று நான் சொல்லுவேன்: இது போன்று உதவுகின்ற நேரங்களில் அரசியல்வாதிகளைவிட மத வாதிகளே சிறந்தவர்கள் என்று அறுதியிட்டுக் கூறுவேன்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.