Wednesday, September 7, 2011

ஆதி திராவிடர் நலப் பள்ளி-உறைவிடங்கள் ஓர் பார்வை.



ஆதி திராவிடர் மற்றும்  பழங்குடியினர்  நலத்துறை  மூலம் 1,254 நல விடுதிகளில் 87,136 மாணாக்கர்களும், 40 பழங் குடியினர் நல விடுதிகளில் 2,072 மாணாக்கர்களும், 296 அரசு உண்டு உறைவிடப்  பள்ளிகளில் 30807 என மொத்தம்  590 விடுதிகளில் 1,20,015  மாணாக்கர்கள்  தங்கிப்  பயின்று  வருகின்றனர்.

இந்தப்  பள்ளிகளில் 8,587  ஆசிரியர் காலியிடங்கள்  உள்ளன.  இதில்,7,542  ஆசிரியர்கள் பணியில்  உள்ளனர். மீதியுள்ள 1045 பணி இடங்களுக்கான ஆசிரியர்களை, ஆசிரியர்  தேர்வு  வாரியம் மூலம்  இந்த ஆண்டே தேர்ந்தெடுத்திடத்   தமிழக  முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.

ஆதி திராவிட நலப்பள்ளிகள் , ஆதி திராவிடர்  நலத் துறையின்  நிர்வாகத்தின்  கீழ்  வருகின்றன. மாநிலத்தின்  முதன்மைத் துறையான  கல்வித் துறை. அதிக அளவிலான நிதியும்  ஒதுக்கப்  பட்டுத்  தனித் துறயாகச்  செயல்பட்டு வருகின்றது.

தமிழக அரசின் கல்வித்  துறையின்  கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட இன் மாணவர்களின் மனோநிலை, நன்மதிப்பீடு,  ஆளுமைத் திறன், உளவியல் பூர்வமான  வளர்ச்சி  ஆகியவற்றை  ஆதி திராவிடர்  நலப் பள்ளிகளில் பயிலும்  ஆதி திராவிடர்  இன  மாணவர்களோடு  ஒப்பீடு  செய்து  ஆய்வு  செய்ததில்,  மேலோங்கி நிற்பது கல்வித்  துறையில்  பயிலும்  ஆதி திராவிடர் மாணவர்களே ஆவர்.

தகுதியுடைய மாநில,  மாவட்டக்  கல்வி  அலுவலர்கள்  ஆதிதிராவிட  நலப்  ப்ள்ளிகளில் நியமிக்கப்  படுவதில்லை.  இவற்றைக்  கண்காணிக்கும்  அதிகாரம்  கல்வித் துறைக்கும்  உண்டென்றாலும்,  கல்வித்துறைப்  பள்ளிகளுக்குக் கொடுக்கும்  முக்கியத்துவத்தை இவற்றிர்குக்  கொடுப்பதில்லை.

 ஆதி திராவிட  நலப் பள்ளி  ஆசிரியர்கள் அவர்களது அதிகாரிகளால் ஆண்டுதோறும் மன அழுத்தத்திற்கு  உள்ளாக்கப் படுகின்றனர். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தெர்வு  விகிதாச்சரத்தை ஒட்டிய காரணங்களே இந்த அழுத்தத்திற்குக்   காரணமாகும். ஆதி திராவிட  நலப் பள்ளிகளில் ஆசிரியர்கள்  மட்டுமே  மாணக்கரின்  குறைந்த  மதிப்பெண்களுக்குக்  காரணமாக்கப்  படுகின்றனர்.

பள்ளிகள்  அமைவிடம், சூழ்நிலை,  பெற்றோர்கள், வாழ்வியல்  ஆதாரங்கள்,  மாணவர்களின்  கற்றல் திறன்,  கற்பனைத் திறன், மாணவர்களுக்கான  அடிப்படை வசதிகள், அவர்களின்  இல்லத்தில்   வழங்கப்படும்  கல்வி  சார்ந்த சூழல்க:,  பள்ளியின் அடிப்படை  வசதிகள், ஆசிரியர்களின்  கற்பத்தில் திறன்,  அரவணைப்பு,. தலைமை  ஆசிரியரின்  தலைமைப்  பண்பு,  இந்தக்  கல்வி நிறுவனங்களை  மேலாண்மை செய்யும் மாவட்ட, மாநில, நிர்வாக  அமைப்புகள் என  பல அடுக்கு  காரணிகளைக்க்  கொண்டவை ஆகும்.

கல்வித் துறை என்பது மனிதவளத்துறை என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதச் வளத் துறையினை கல்வி சார்ந்த பயிற்சிகளையும், தகுதிகளையும் பெற்றவர்கள் நிர்வாகம்  செய்தால்தான் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்  வளம் பெறும்.

அரசு மக்கள்  நலப்  பணிகளை மேற்கொள்வதற்காக, மாறிவரும் காலச்  சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் புதிய புதிய கல்விக்  கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வரும் பொழுது ஆதி திராவிடர்  நலத் துறை பள்ளிகள்  நிர்வாக  முறையை  மாற்றாமல், ஆங்கிலேயர்  ஆட்சியின்  ஒற்றை முறையினையே பின்பற்றிவருவது வியப்பின அளிக்கின்றது.  சிந்த்திது உரிய  மாற்றங்களைக் கொண்டு  வருவது காலத்தின்  கட்டாயமாகும்..

ஆதிதிராவிடர் நலத் துறை விவாதத்தில் செவ்வாய்க் கிழமை தமிழக முதல்வர் மற்றும்  ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பேசிய  பேச்சுக்களிலிருந்து  புள்ளி விபரங்கள்  பெறப்பட்டன.

தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்  நலச் சஙகத்தின்  மாநிலத்  தலைவர், க. மனோகர்,  ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாத  பாடம்  இதழ்களில் எழுதிய  கட்டுரைகளிலிருந்து சுருக்கமாக  நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.