Monday, September 19, 2011

தூக்குத்தண்டனை குறித்துப் புதியவன் சொல்லும் பழைய செய்திகள்:-


http://www.eelamwebsite.com/?p=15994

பிரிட்டிஷ் இந்தியாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், 1940 இல் முதன்முதலாக தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டது. அதே ஆண்டில் கொச்சின் சமஸ்தானத்திலும் அதன் அரசர் தூக்குத் தண்டனையை ஒழித்தார்.

1950 களில் இந்த சமஸ்தானங்கள் இந்தியாவில் இணைக்கப்பட்ட பிறகு, மீண்டும் தூக்குத் தண்டனை அமுலாகி விட்டது. தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்ட 1940-50 ஆண்டு காலத்தையும், பிறகு மீண்டும் தூக்குத் தண்டனை அமுலுக்கு வந்த 1950-1960 என்ற பத்தாண்டு காலத்தையும் ஒப்பிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்தைவிட, அது அமுலில் இருந்த காலத்தில்தான், கொலைக் குற்றங்கள் அதிகமாக நடந்தன என்ற உண்மை கண்டறியப்பட்டது.

சீரிய சிந்தனையாளர் ஆர்தர் கோயிஸ்ட்லர் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்: ஒரு காலத்தில் இங்கிலாந்தில் சிறு திருட்டு, பிக்பாக்கெட் குற்றங் களுக்கே மக்கள் கூட்டத்தின் முன் மரணதண்டனை விதிக்கப்பட்டன. பெரும் கூட்டத்தைத் திரட்டி, அவர்கள் கண் முன்னே, ‘பிக்பாக்கெட்’ அடிப்பவர் களுக்கு மரண தண்டனை விதித்தால், அதை நேரில் பார்த்தவர்கள் திருந்துவார்கள் என்று நினைத் தார்கள். அப்படி ஒரு முறை தூக்கிலிட்ட சம்பவம் நடந்தபோது, கூட்டத்தினர், தூக்கு சம்பவத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது,63 பொது மக்களிடம் ‘பிக்பாக்கெட்’ அடித்து விட்டதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. தூக்குத் தண்டனை குற்றங்களைத் தடுக்காது என்பதற்கு, இது மற்றொரு சான்று.

வரலாற்றிலே 2000 ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தும், நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்தார். காரணம், அங்கே கூடியிருந்த கூட்டம், குற்றம்சாட்டப்பட்டவர் மீது பகையும், வெறுப்பும் கொண்டிருந்தது! அந்த நீதிபதியின் பெயரை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், அந்த நீதிபதி – பிலாத்தோஸ்! மரண தண்டனைக் குள்ளாக்கப்பட்ட கைதி – ஏசு.”

ஏசுவுக்கு எதிராக சதி செய்த யூதர்கள் கூட்டம், அவர் மீது மரணதண்டனையை உறுதி செய்து, அதை அறிவிப்பதற்கு அரச மதகுரு பிலாத்தூசை அழைத்து வந்தனர். அவரோ ஏசு நிரபராதி; விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மக்கள் கூட்டத்தைப் பார்த்து தீர்ப்புக் கேட்டார். ஆனால் சதிகாரர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டிருந்த அக்கூட்டம், ‘கொலைசெய்’ ‘கொலைசெய்’ என்ற முழக்கமிட்டதால், வேறு வழியின்றி, ‘நீங்களே, முடிவு செய்யுங்கள்’ என்று கூறி வெளியேறிவிட்டார். குற்றமற்றவர் என்று நீதிபதிக்கு தெரிந்தும், எதிர்ப்பு உணர்வுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்டநிலையில், நிரபராதியை தண்டிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.

நீதிபதி குறிப்பிடும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1940 இல் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. திருவாங்கூர் மன்னர் ஆட்சியில் சர். சி.பி. இராமசாமி அய்யர் திவானாக இருந்தார். அந்த சமஸ்தானத்தில் ‘மனுதர்மம்’ ஏற்றுக் கொள்ளப்பட்டு, பார்ப்பான் எந்தக் குற்றம் செய்தாலும், மரண தண்டனை தரக்கூடாது என்ற நடைமுறை அமுலில் இருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனைத்துப் பிரிவினருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும், கிரிமினல் குற்றங்களில் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். திருவாங்கூரில் மன்னர் பதவிக்கு வருவதில் அவரது பரம்பரையினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு பிரிவினர், ஒரு பார்ப்பனரை வைத்து, எதிரியைக் கொலை செய்வது வழக்கம்.

பார்ப்பனர் கொலை செய்தால், சமஸ்தானத்தில் தண்டனை கிடையாது என்பதற்காகவே கொலைக்கு பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்தனர். எனவே பிரிட்டிஷ் சட்டப்படி தண்டனை வழங்குவதில் அனைவரையும் சமமாகக் கருதிவிட்டால், பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதால், பார்ப்பனக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவே தமது சமஸ்தானத்திலேயே மரண தண்டனை முற்றாக ஒழித்து, சர்.சி.பி. ராமசாமி அய்யர் அறிவித்தார்.
நன்றி- புதியவன்
(மனம் திறக்கிறார் கே.டி.தாமஸ் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வார்த்தைகளிலிருந்து )

0 comments:

Post a Comment

Kindly post a comment.