Wednesday, September 7, 2011

தோழர்.தா.பாண்டியனிடம் வினாக் கணைகளைத் தொடுக்கும் பாடம் ஆசிரியர் அ.நாராயணன்

தா.பாண்டியனுடன்  பாடம் ஆசிரியர் அ.நாராயணன்  நிகழ்த்திய விவாதம், செப்டம்பர் பாடம்  இதழில் விரிவாக ஏழு பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வளவு விரிவான அளவில் கம்யூனிஸ்ட்  தலைவர்  ஒருவரின் பேட்டி வெளிவந்தது இதுதான் முதன் முறை என்றே எண்ணுகின்றேன்,தோழர்  எம்.கல்யாணசுந்தரம் ,  பாலன்  போன்றோர்  கட்டுரைகள் எழுதியுள்ளனர் இன்றைய சமூகச்சூழலில்.  அந்தக் கட்சி ஆற்றவேண்டிய   பங்களிப்பின்  முக்கியதுவத்தையும்,  அந்தத்  தலைவரின்  தகுதியையும் எடுத்துக்காட்டுவதாகவே  கருதுகின்றேன்.  பாடம் ஆசிரியர் எழுப்பிய  கேள்விகளை இங்கே குறிபிடப் போவதில்லை.  தா.பா. சொன்ன் பதில்களைச் சிறிது சுட்டிக் காட்டினாலே கேள்வி  என்ன என்பது புரிந்துவிடும்.

பாடம்  ஆசிரியர்  முன்னதாகவே  எழுதித் தந்து  கேட்ட சில  வினாக்களுக்கு தா.பா. பதில்  அளிக்கவில்லை. சாராயக்கடையை  எதிர்த்துப் போராட வேண்டிய  இயக்கம்,  இலங்கையைப் போன்று தென்னையிலிருந்தும்,  சாராயம்  தயாரிக்கச்  சொல்கின்றது. டாஸ்மாக்கில்  இவர்கள் தொழிற்சங்கம்  இருப்பதாலோ?  இப்பொழுது  தனியார் துறைகளில்  இட ஒதுக்கீடு, பெண்கள் பிரநிதித்துவம் உண்டா?  தெரிந்தோர் பதில்  தருக.

கொண்ட  கொள்கையில்  உறுதியுடைய  இரு நல்லோரும் உரையாடிய பாங்கு  பண்புடையவர்கள் செயல் எப்படி இருக்கும்  என்பதக்  காட்டியது. ஒரு விரலில் தட்டச்சு செய்யும்  என்னால் முழுமையையும் தர முடியவில்லை. மன்னிக்க வேண்டுகின்றேன். 

நாங்கள் கட்சிக்கு தொண்டர்களைச் சேர்த்துவிட்டு சந்தாவசூலிப்பதோடு,  முறையான  பயிற்சியும் அளிக்கின்றோம். தகுதி இல்லாதவர்களை  அடுத்த ஆண்டில் உறுப்பினர்களாக  வைத்துக் கொள்வதில்லை. உதாரணமாக கோவையில்  ஆட்டோ  ஓட்டுநராக உள்ள எங்கள்  தோழர் இதுவரை ஆறு  புத்தகங்களை எழுதியுள்ளார் பேராசிரியர்களே  வியக்கும் அளவிற்கு அவை  தரமானவை. ஜனசக்தி, சிறு வெளியீடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து  படித்ததனால்தான்  அவருக்கு  அது சாத்தியமாயிற்று. எங்கள்  இயக்கத்தில் ஐம்பது சதவிகிதம் தொண்டர்களாவது இந்த அளவிற்குப் புலமை பெற்றவர்கள்.

லத்தீன் அமெரிக்காவில்  பன்னிரெண்டுக்கும்  மேற்பட்ட நாடுகளில் கம்யூனிஸ்ட்  ஆட்சிதான்  நடை பெறுகின்றது. வெற்றிப்[எற்றவர்கள்  எல்லாம் சாதாரண  விவசாயிகளும், தொழிற்சஙத்தைச்  சேர்ந்தவர்களுமே ஆவர். ஆனால், தோற்றவர்களோ எண்ணெய் நிறுவன  முதலாளிகளும், இராணுவத்  தளபதிகளும்தான்.

இந்தியாவில் உள்ள சாதிப்பிடிப்பு, பழக்க வழக்கங்கள்,  மத நம்பிக்கை மற்றும்  மொழியும் , கலாச்சாரமும் வேறுபடுகின்றன. சுதந்திரப்  போராட்டமே 170 ஆண்டுகள் நடந்தன.பொதுவுடைமைக்கு  இன்னும்  சில  காலம் பிடிக்கும். நாட்டில்  நடந்த சதி வழக்குகளைக்  கணக்கிட்டால் 90 சதவிகிதம் கம்யூனிஸ்ட்கள்  மீதுதான் என்பது மறுக்க முடியாத வரலாறு.

எ4ங்கள்  கட்சியில் சேர்ந்துள்ள பெண்களின்  ஆதிக்கம் அதிகம். அதற்காக  நாங்கள் அடங்கிப் போகவில்லை. அவர்களை  மதித்து  நடக்கிறோம். சட்டசபைத்  தேர்தலில் எங்களுக்கென்று  கிடைத்த இடங்களில் எல்லாம்  வெற்றி பெற வேண்டு என்ற  நோக்குடனேயே  செயல்படுகின்றோம்.  வேட்பாளர் மூத்தவரா, இளையவரா, பெண்ணா .. என்றெல்லாம்  பார்ப்பதில்லை

இந்தியாவில்  இந்து மதத்தச் சார்ந்த  மக்களடிப்படையில்  பார்த்தால் பாரதிய  ஜனதா கட்டாயம்  வெற்றி பெற வேண்டும். இந்து மக்கலே இந்துத்வா  கோட்பாட்டை நிராகரித்து இருக்கிறார்கள். இதுதான் இந்தியாவின்  ஜனநாயகம். இந்தியாவின் சிறப்பு.

தமிழ்நாட்டைப்  பொறுத்தவரை பா.ம்.க., கொங்கு வேளாளர், விடுத்லைச்  சிறுத்தைகள் போன்ற  சாதியக்  கட்சிகளுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி கிடைத்துள்ளது. முஸ்லீம் மக்களின்  கலாச்சாரம் என்பது வேறு. அவர்களின் உணர்வுகளை அந்த மக்களின் பிரநிதிகள்தான் வெளிப்படுத்திட முடியும். எனவே, அவர்களுக்கு உரிய  இடம்  வழங்கப்பட்டதில் எஙளுக்கு மகிழ்ச்சி.

இலங்கையில்  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பத்னீரையும்,  கள்ளையும் சாராயமாக மாற்றி  விற்பனை  செய்கின்றார்கள். இங்கும் தென்னையால்  விவசாயிகள்  பயனடைவதில்லை. இலங்கை போன்று செயல்பட்டால்  தென்னை பயிரிடுவோரின் வாழ்வாதாரம்  காப்பாற்றப்படும்.

சமூகப் பிரச்சினைகளைப்  பாமர  மக்களுக்குக் கொண்டு செல்ல தெரு நாடகங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள்  இவற்றை  கலைக்குழுக்கள்  உண்டு. கலைஞர்களுக்கும்  குடும்பம் உண்டு. மக்களிடம்  பணம் வசூலிக்க முடியாது. ஆயினும், புதிய முயற்சிகளை ஊக்குவிக்க முயல்கிறோம்..

மக்கள் தொகை  கூடிக் கொண்டே  போனால், எதிர்காலத்தில் எதிர்கொள்ள முடியாத உணவுச் சிக்கல் ஏற்படும்.  இற்க்குமதி செய்ய முடியாத ஒரு  பொருளாக  நிலம்  ஆகிவிடும். பயிரிடப்படும்  நிலத்தை பறித்தும்,  அழித்தும்தான் தொழிற்சாலைகளும், வீடுகளும்  கட்டுவதோடு, சாலை விரிவாக்கத்திற்கும்  பயன்படுத்தப்படுகின்றது. இந் நிலைமை  தவிர்க்கப்பட வேண்டும்.

பன்னாட்டு  நிறுவனங்களில் பணியாற்றும்  தொழிலாளர்களுக்கு  தொழிற்சங்கம். அமைக்கும் உரிமை இல்லை. பிற்படுத்தப்பட்டோர்,  மலைவாழ்  மக்கள்,  தாழ்த்தப்பட்டோர், பெண்கள்  போன்றோருக்கு  உரிய பிரதிநிதித்துவம்  அளியுங்கள்  என்றும்  கோர முடியாது. பன்னாட்டு  நிறுவனங்கள் என்பது , இந்தியாவிற்குள் அது ஒரு தனி இந்தியா. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  மாற்ற வேண்டும்  அப்பொழுதுதான் ஆக்கிரமியுங்கள்  என்பதை மாற்றி  அனுமதிக்கின்றோம் என்று  சொல்ல முடியும்

கலை இலக்கிய வளர்ச்சி,

விஸ்வரூபம் எடுத்து  எல்லா மக்களையும்  சுரண்டிச்  சாகடிக்கும்  தமிழக அரசின் டாஸ்மாக்  சாராயக்  கொள்கை, 
அதற்கு மவுனமாக  இடதுசாரிகள்  அளித்துவரும்  ஆதரவு,
  
மக்களை மேலும்  கடனாளிகளாக்கும்  தமிழக அரசின் நிதிக் கொள்கை,
நிதிப் பற்றாக்குறை,
  
அமைப்பு சாராத்  தொழிலாளர்தம்  மோசமான  வாழ்க்கைத் தரம்

சுற்றுச் சூழல்  தொடர்பான  இடதுசாரிகளின்  பார்வை,

கந்துவட்டி,  கள்ளச் சாராயம் ஆகியவற்றிற்கு  எதிராகப்  போராடிய இந்தியக்  கம்யூனிஸ்ட்  கட்சியைச்  சேர்ந்த வேலுசாமி,  நாவலன்  ஆகியோர்  கொலை  செய்யப்பட்டது..
.........  
தீவிரவாதத்திற்கு எதிரான  போர்  என்ற போர்வையில் இன அழிப்பில்  ஈடுபட்ட இலங்கை  அதிபர்  ராஜபக்சேவிற்கு  ரஷ்ய  அரசும், சீன  அரசும்  கொடுத்துவரும்  ஆதரவு, அதற்கு  பின்புலமாக  உள்ள பொருளாதார  அரசியல், 

லோக்பால்  மசோதா, லோக்  அயுக்தா,  கம்யூனிஸ்ட்  கட்சியின்  அடுத்த ஐந்து  ஆண்டுகளுக்கான  திட்டங்கள்  உட்பட் 

 பல  கேள்விகளையும்  முன்பாகவே  எழுதி  தா.பாண்டியன்  அவர்களின்  உதவியார்களிடம்  கொடுத்தும்,  மீண்டும்  எடுத்துக் கூறியும், தா.பாண்டியன்  அவர்களால்  போதுமான  நேரம் (பாடத்திற்காக )   நமக்காக ஒதுக்க  இயலாமல்  போய்விட்டது.
.
வாசகர்கள்  மன்னிக்கவும்-ஆசிரியர்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.