Saturday, September 3, 2011

தூக்குதண்டனையை ரத்து செய்ய கசாப் கோரல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது


 மும்பை அட்டாக் வழக்கில் சிக்கிய ஒரே ஒரு குற்றவாளியான அஜ்மல் கசாப் தனக்கு மும்பை கோர்ட் அளித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரும் கடிதம் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டில் நவம்பர் 26 ம் தேதி மும்பையில் முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்ந அதிர்ச்சி சம்பவத்தில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், என பலர் உயிரிழந்தனர். இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டாலும், உயிருடன் பிடிபட்டது அஜ்மல் கசாப் மட்டுமே. பாகிஸ்தானை சேர்ந்த இவன் மீது வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இறையாண்மையை குலைத்த தேச விரோத செயல் குற்றத்திற்காக இவனை தூக்கிலிட வேண்டும் (மரண தண்டனை) என்று ( பிப்- 21 - 2011 ) தீர்ப்பளித்தது. இந்தியாவை சேர்ந்த அன்சாரி மற்றும் சபாவுதீன் ஷேக் விடுவிக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.