Friday, September 23, 2011

ஒருகையில் ஏகே47 ! மற்றொரு கையில் புத்தகம்!!

ஷபாப் பயங்கரவாத அமைப்பு சோமாலியாவில் இயங்கி வருகின்றது. வலுவான மத்திய அரசு இல்லாத நாடு சோமாலியா. நாட்டின் தென்பகுதி பயங்கரவாத அமைப்பின் வசம் உள்ளது. மற்றவை பல்வேறு பயங்கரவாத, பழங்குடியினக் குழுக்களிடம் உள்ளது.

தென்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், வானொலி உள்ளிட்ட பல்வேறு உட் கட்டமைப்புக்கள் அனைத்தும் ஷபாப் வசம் உள்ளன. ரமலான் மாதத்தில் தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அந்த அமைப்புகள் பற்றிய விபரங்கள், குரான் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன.

பத்து முதல் பதினேழு வயது வரையிலான ஆணாக்கர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணாக்கருக்கு ஏ.கே47 ரகத் துப்பாக்கிகள், கொஞ்சம் பணம், மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகள் தொடர்பான புத்தகங்கள்ப் பரிசுகளாக வழங்கப் பட்டன. மூன்றாம் பரிசாக இரு கையெறிகுண்டுகள் உண்டு. சூழல் காரணமாக சோமாலியாவில் பெரும்பான்மையோருக்கு துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் நிச்சயம் உண்டு.

“இஸ்லாம் மதத்தைக் காப்பாற்ற ஒரு கையில் புத்தகத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்” என்கிறார் பரிசு வழங்கிப் பேசிய ஷபாப் தலைவர், ஷேக் முக்தார் அபு மன்சூர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.