கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகள் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட படைப்புக்களில் இலக்கிய நூல் பரிசுப்போட்டியின் கீழ் எட்டு படைப்புக்கள் மிகச்சிறந்தவையாக தெரிவுசெய்யப்படுள்ளன என்று கிழக்கு மாகாணக்கல்வி மற்றும் பண்பாட்டுத்திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நூல்களின் படைப்பாளிகளுக்கு அடுத்த மாதம் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் மாகாணத் தமிழ் இலக்கிய விழாவின் நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட நூல்களின் பெயர்களும் துறைகளும் அவற்றின் படைப்பாளிகளின் பெயர்களும்
1. நாவல் – ‘சாம்பல் பறவைகள்’ -கல்முனை எஸ் ..அரசரத்தினம்
2. காவியம் - ‘நீலாவணன் காவியங்கள்’- திருமதி ஆ.சின்னத்துரை
3. கவிதை – ‘செம்மாதுழம்பூ’- கவிஞர் nஷல்லிதாசன்
4. கவிதை – ‘செங்கமலம்’- அ.தி.மு.வேலழகன்
5.சிறுவர் பாடல்கள் – ‘ இசையோடு அசைபோடுவோம்’- கலாபூஷணம் ச.அருளானந்தம்
6.சிறுவர் சிறுகதை – சின்னஞ்சிறு கதை’ கலாபூஷணம் ச.அருளானந்தம்
7சிறுவர் நாவல் – ‘பறக்கும் ஆமை’- ஓ.கே.குணநாதன்
8இலக்கிய ஆய்வு – ‘கொட்டியாரம்’- பால.சுகுமார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கு 12 தமிழ்,முஸ்லிம் படைப்பாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நான்கு பேர் வீதம் 12 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் மாகாணத்தமிழ் இலக்கிய விழா எதிர்வரும் அக்டோபர் மாதம் 14, 15 , 16 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு நகரில் நடத்தப்படவிருக்கின்றது.
நிறைவு நாளான ஒக்டோபர் 16 ஆம் திகதி மாலை முதலமைச்சர் விருது வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறும்.
முதலமைச்சர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 12 படைப்பாளிகளின் பெயர்விபரம்.
திருகோணமலை மாவட்டம்
1. அபுசாலிஹூ மீராமுகைதீன் (பல்துறை)
2. தேவசகாயம் நந்தினி சேவியர் (ஆக்க இலக்கியம்)
3. பிரம்மஸ்ரீ மு.பத்மநாதசர்மா (சிற்பம்)
4. அ.அரசரத்தினம்( பல்துறை)
மட்டக்களப்பு மாவட்டம்
1. திருமதி அசோகாதேவி யோகராசா (கவிதை),
2. அ.அரசரத்தினம் (ஆக்க இலக்கியம்)
3. திருமதி உஷாதேவி கனகசுந்தரம் (சாஸ்திரீய நடனம்)
4. எஸ்.பி.பொன்னம்பலம் (ஆக்க இலக்கியம்)
அம்பாறை மாவட்டம்
1. திருமதி யோ.யோகேந்திரம் (சிறுகதை)
2. அலியார் பீர்முகம்மது (கவிதை)
3. எஸ்.அப்துல் ஜலீல் (ஓவியம்)
4. க.யோன்ராஜன் (ஊடகத்துறை).
http://www.thinakkathir.com/?p=19297
0 comments:
Post a Comment
Kindly post a comment.