படம் உதவி நன்றியுடன் http://www.globaltamilnews.net
என்ற வினாவிற்கு விடை சொல்ல யாரால் முடியும்? விருப்பமான முடிவு என்ன என்பதை வேண்டுமானால் சொல்லலாம். ஓர் திரட்டு.
முதலாவதாக - மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகள் மூன்றாக பிரிந்து காணப்படுகின்றன. இவை ஐ.நா. அறிக்கைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒரு பிரிவும், இவ் அறிக்கைக்கு சர்வதேச விசாரணை கூடாது என இன்னொரு பிரிவும் இவை இரண்டிற்கும் அப்பால் நடு நிலையும் வகிக்காது அமைதிகாக்கும் நாடுகளும் உள்ளன.
இதில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கருத்தைக் கொண்ட நாடுகள் - அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (27), சுவிச்சர்லாந்து, நோர்வே, கனடா, பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள்.
விசாரணை நடத்தக் கூடாது என்ற கருத்தைக் கொண்ட நாடுகள் - சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, மலேசியா, மாலத்தீவு போன்றவை.
நடுநிலைமையும் இல்லாமல் அமைதிகாக்கும் நாடுகள் - இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள்.
நடுநிலை அற்று அமைதிகாக்கும் நாடுகளில் இந்தியாவின் அமைதியை நாம் ஓர் நல்ல அறிகுறியாகக் கொள்ளலாம். காரணம் 2009ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி ஐ. நா. மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வெற்றி பெற்றுக் கொடுத்தது இந்தியா. தற்பொழுது அமைதியாக இருப்பது நல்ல விடயம்.
இந்தியா சிறீலங்காவிற்கு முன்பு போல் ஆதரவு வழங்குமானால் நிச்சயம் சிறீலங்கா மீது கொண்டுவர வேண்டும் என சகலரும் எதிர்பார்க்கும் தீர்மானம் தோல்வியிலேயே முடியும்.
03.06.2011அன்று சர்வதேச மன்னிப்புச் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சனல்-4 காணொளிக் காட்ச்சிகள் முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்கள் மீது இடம்பெற்ற இனஅழிப்பின் கொடூரக் காட்சிகளை அப்படியே ஐ. நா மனித உரிமை சபையில் பங்குபற்றுவோருக்கு காண்பிக்கப்பட்டது.
இக் காட்சிகளை பார்க்க முடியாமல் சிலர் கண்களை மூடிக் கொண்டனர், சிலர் கண்ணீர் விட்டனர், பலர் ஆத்திரம் கொண்டனர். ஆனால் அங்கு பார்வையாளராக அமர்ந்திருந்த இலங்கை அரசப் பிரதிநிதிகளோ எவ்வித ஈவிரக்கமற்ற மனதுடன் பொய்யென உணர்ச்சி வசப்பட்டு அலட்டினார்கள்.
ஐ. நா நிபுணர்களில் ஒருவரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்தோபர் கயின்ஸ் கணொளிகள் யாவும் உண்மையானதுடன், அவையாவும் ஐ. நா வினால் ஏற்கக்கூடிய தரத்தில் உள்ளதாகவும் கூறிவிட்டார்.
ஐ. நா மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் தனது ஆரம்ப நாள் உரையில் சிறீலங்கா பற்றிய ஐ. நா அறிக்கைக்கு ஐ. நா அங்கத்துவ நாடுகள் ஆதரவு வழங்குவதுடன், இதற்கு நடவடிக்கை எடுக்க உதவுமாறும் கேட்டுக் கொண்டார். திருமதி நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் ஆத்திரம் கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள், திருமதி நவநீதன்பிள்ளை ஒரு பக்கச்சார்பானவர் எனவும், மிக நீண்டகாலமாக அவர் இலங்கையுடன் ஒத்துழைக்க மறுப்பதாகவும் உரையாற்றினார்கள்.
இதேவேளை பேராசிரியர் கிறிஸ்தோபர் கயின்ஸ் உரையை தாம் ஏற்றக முடியாது, மேற்கு நாடுகள் யாவும் இணைந்து இலங்கை மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கைப் பிரதிநிதிகள் கூறினர்.
இவ்விடயம் நிச்சயம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 18வது கூட்டத் தொடரிலேயே ஏதும் நடைபெறலாம். இதற்காக புலம்பெயர்வாழ் அமைப்புக்களும், சங்கங்களும் இன்றே அதற்கான பரப்புரைகளை ஆரம்பிக்கவேண்டும்.
இவ் அறிக்கைக்கு விசாரணை நடத்தத் தேவையில்லையென கூறும் நாடுகளை தமது செயற்பாட்டில் உள்ளடக்க வேண்டும். அடுத்து மௌனம் காக்கும் இந்தியாவை இவ் அறிக்கைக்கு ஆதரவு செலுத்த வைக்கும் நிலையில் வேறு பல இந்தியச் சார்பு நாடுகளின் ஆதரவையும் பெறமுடியும்.
இவ் அறிக்கையை சரியான முறையில் நாம் செயற்பட வைக்கத் தவறும் கட்டத்தில் நிட்சயம் ஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவித அரசியல் விமோசனமும் ஏற்பட முடியாது. ஆகையால் தமிழீழ பற்று கொண்ட தமிழ் தேசியவாதிகள் யாவரும் ஒன்று திரண்டு இவ் அறிக்கைக்கு ஆதரவு தேடவேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழன் உலகத் தமிழனுடைய கடமையாகும்.- ச.வி.கருபாகரன்.
ஐ.நா. இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்குமா ? இலங்கைக்கு உரிய தண்டனை கிடைக்குமா? வினாவிற்கு விடையினை சாமன்யனான ஓர் பதிவர் எப்படிச் சொல்ல முடியும். காலம்தான் பதில் சொல்லும்.
ஏனெனில், ஆதரவுக் குரல் கொடுப்போர் முடிவெடுக்கும் நிலையில் இல்லை. இருந்திருந்தால் இலங்கையுடனான தூதரக உறவுகள் என்றைக்கோ துண்டிக்கப்பட்டிருக்கும்.
இவை பற்றிய சிந்தனைகள் சிலரையேனும் சென்றடையட்டும் என்பதற்காகவே இந்த மீள்பதிவு.
நன்றிக்குரியோர் : http://www.pooraayam.com/
0 comments:
Post a Comment
Kindly post a comment.