புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இயல்பு வாழ்க்கையை தொடர்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11000 முன்னாள் போராளிகளில் மூன்றில் இரண்டு பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், இவர்கள் சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கையை தொடர்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் கடுமையான இராணுவ பிரசன்னம் காணப்படுவதனால் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடனோ அல்லது அவர்களது குடும்பத்தாருடனோ தொடர்புகளைப் பேண பலர் முன்வருவதில்லை.
வன்முறைகள் இல்லாத போதிலும் தற்போதைய போரற்ற சூழ்நிலையை முழுமையான சமாதானமாகக் கருத முடியாது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.eelampress.com/2011/08/34213/ஈழம் பற்றி அவர்கள் சொல்லும் கருத்துக்களைத் தொகுப்பதே நோக்கம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.