சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின், கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதல் முறையாக, திருநங்கைகளைக் கொண்டு, 100 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.
இக் குழுக்களுக்கு பயிற்சி, சுழல்நிதி மற்றும் பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டு, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர, உதவி செய்யப்படும். தகுதியுள்ள திருநங்கை சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் துவங்க 15 லட்ச ரூபாய் வரை, 25 சதவீத மானியத்துடன் பொருளாதாரக் கடன் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது, என அதில் கூறப்பட்டுள்ளது.
வரவேற்கபடக்கூடிய செய்தி. கண்டிப்பா அவங்களுக்கு செய்யனும். செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.
ReplyDelete