இலங்கை வெளிஉறவு அமைச்சரின் ஏமாற்றம் தூக்குத்தண்டனை தள்ளிவைப்பு
தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் தீர்ப்பை மாற்றி அமைக்க கோருபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசரணை நடத்தப்பட வேண்டுமென கோரும் அதேவேளை, மறுபுறத்தில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்யுமாறு தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளும் சில தரப்பினரும் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையின் மூலம் குறித்த சக்திகளின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நாவின் அறிக்கை மற்றும் சனல் 4 ஊடகம் ஆகியவற்றின் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்தத் தரப்பினர் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் என்பதனை எவரும் மறந்து விடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறுதரப்பிலும் ஐக்கியப்பட்ட கோரிக்கைகளின் வெற்றியாக மரண தண்டனை எட்டுவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,
http://www.itamil.com/
0 comments:
Post a Comment
Kindly post a comment.