இந்நிலையில் பணி நியமனம் தொடர்பாக அரசு புதிய உத்தரவிட்டு (அரசாணை எண்: 105) உள்ளது.தமிழகத்தில் கடந்தகல்வி ஆண்டின் இறுதியில் தேர்வு செய்யப்பட்டோரின் திருத்திய பட்டியலை தயார் செய்து, ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்ற பட்டியலில் விடுபட்டவர்களையும் இணைத்து சான்றிதழ் சரிபார்த்தலுக்குப்பின் புதிய பட்டியலை இணையதளம் மூலம் வெளியிட வேண்டும். தேர்வானோருக்கு வேலை நியமன ஆணைகள் அனுப்ப வேண்டும்.
ஆதலால், தற்போது பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2636 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 1029 பணியிடங்கள் என மொத்தம் 3665 பணியிடங்களை, விடுபட்டோரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்த்து, திருத்திய பட்டியல் தயாரித்து வெளியிடலாம்.
தி.மு.க. ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் கைவிடப்படவில்லை என்பதுதான் செய்தி. விடுபட்டவர்களைச் சேர்த்துக் கொண்டு புதிய பட்டியல் தயாரிக்கலாம் என்பது ஆள்வோர் கட்சிக்கு இனிக்கும் செய்தி. எப்படியோ வேலை இல்லாதோர் பட்டியலின் எண்ணிக்கை கொஞசம் குறைந்தால் நல்லதுதானே, நண்பர்களே!
//எப்படியோ வேலை இல்லாதோர் பட்டியலின் எண்ணிக்கை கொஞசம் குறைந்தால் நல்லதுதானே, நண்பர்களே!//
ReplyDeleteநிச்சயமாக!