Monday, August 1, 2011

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனத்துக் கவிதை. அழகியும் காதலும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் சீனாவில் வாழ்ந்தவர் மெங் ஜியா என்ற கவிஞர்.
அவர் எழுதிய கவிதை ஒன்று இன்று என் பார்வையில் பட்டது. சீன மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யபட்டிருந்தது. அதன் தமிழ் வடிவம் பின்வருமாறு. எனக்கு உதவியது கூகிள் மற்றும் இணையதளம்.

கூரான வாளை விலக்கியே வைத்தல் வேண்டும்;
அழகான பெண்ணருகே சென்றிடல் வேண்டாம்:

கூரான வாளின் நெருக்கம் கையைக் காயமாக்கும்;
அழகான பெண்ணின் நெருக்கம் வாழ்க்கையைக் காயமாக்கும்:

சாலை விபத்திற்கு நெடுந்தூரப் பயணம் தேவையில்லை;
பத்துமுழத் தூரப்பயணமே சக்கரமொன்றை உடைத்திடப் போதும்:

மாற்றி மாற்றிக் காதலிக்கும்போது அதன் அச்சம் அகன்றுவிடும்;
(ஆயினும் காதலிக்கும் ஆணின்)
ஆத்மாவைக் காயப்படுத்திட ஓர் மாலைப்பொழுதே போதும்!

இன்பத்திற்கு எதிரான கவிதையாக இருப்பினும், அழகிய பெண்ணைக் காதலித்ததால் ஏற்பட்ட அல்லலை 18ஆம் நூற்றாண்டில் சீனத்துக் கவிஞர் பாடியுள்ளதை இணைய தளங்களின் உதவியால் உங்களுக்கு விருந்தாக்குகின்றேன்.

2 comments:

  1. அருமையான கவிதை தான் ,
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete

Kindly post a comment.