திரை கடலோடித் திரவியம் தேடிட , செளதி அரேபியாவிற்குச் சென்ற ஒருவர் காணாமற் போனார். 13ஆண்டுகளாக அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. அவரிடமிருந்து எந்தவிதமான தகவலும் குடும்பத்தினருக்கு வரவில்லை. தகவல் தொடர்பு முற்றிலுமாக அறுந்தது. அதனால் அவரது குடும்பத்தினர் அவர் இறந்துவிட்டார் என்றே முடிவு செய்துவிட்டனர்.
அவரது மகன் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தான். குடும்பத்தினரைக் காப்பாற்றிட வருமானம் வேண்டுமே, அதனால், திருப்பூரில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டான்.
காணாமற்போனவருக்குத் தற்பொழுது வயது51. அவர்1998ல் இலவச விசாவில் செளதிக்குச் சென்றிருக்கின்றார். முதல் இரண்டு ஆண்டுகள் எந்தவிதமான சிக்கலும் இல்லை. அவர அழைத்துச் சென்றவருடனான் தொடர்பு அதன்பின் விடுபட்டுப் போனது. தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்வியறிவற்றவராததால் யாரை அணுகுவதென்றும் தெரியவில்லை. சட்ட திட்டங்களும் புரியவில்லை. எப்படியோ நாட்கள் நகர்ந்தன. உடல் நலக் குறைவு ஏற்பட்டது. வர்வாய் இல்லை. எனவே, காலம் தள்ள இயலவில்லை.
இந்தச் சூழலில், இவரது சோகக்கதை பத்திரிக்கையாளர் ஒருவருக்குத் தெரியவந்தது. அவர் இந்தியத் தூதரகத்திற்கு இவரது பிரச்சினைகளைக் கொண்டு சென்றார். எஸ்.டி. மூர்த்தி என்ற தூதரக அதிகாரி பரிவுடன் பிரச்சினையை அணுகினார். பிரச்சினை தீர்ந்தது. ஒருவாறாக, பாதிக்கப்பட்டவர் இந்தியா வந்தடைந்தார்.
அவரது பெயர் என். சுப்பிரமணியன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர். உடல்நலமற்ற தந்தையைப் பாசத்துடன் வரவேற்கிறான், அவரது மகன், சுகந்தன். அவரைப் பேணிக் காப்போம் என்று மகிழ்வுடன் சொல்கின்றான். எல்லோரும் என் கணவர் இறந்துவிட்டதாகச் சொன்னாலும், அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வந்துவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டுவிட்ட அவரைக் கைவிடமாட்டோம் என்கிறார், அவர் மனைவி, மாலேஷ்வரி.
என்.சுப்பிரமணியத்திற்கு உதவி செய்த செளதி பத்திரிக்கையாளர், அவருக்கு உதவியாய் இருந்த செளதி இந்தியத் தூதரக அலுவலர்கள் அனைவரையும் வாழ்த்துவோம் மனதார! அன்பே கடவுள்!
Tuesday, August 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
jayashree shankar jayashree43@gmail.com to illam
ReplyDeleteshow details 8:16 AM (2 hours ago)
தெய்வம் உண்டு.....எவர்க்கும்...எங்கேயும்..மனிதர்களாய்...
(இல்லம் குழுமத்திலிருந்து)
Geetha Sambasivam geethasmbsvm6@gmail.com to illam
ReplyDeleteshow details 1:16 PM (1 hour ago)
வாழ்த்துகள்.
இல்லம் குழுமத்திலிருந்து