Wednesday, July 20, 2011

போக்குவரத்துத் துறையில் OD & LD ஊழல்!

காலங்கள் மாறின........காட்சிகள் மாறின, ஆட்சிகள் மாறின.....அதிகாரங்கள் மாறின, அதிகாரிகள் மாறினர், ஆனாலும், ஊழல் மட்டும் மாறவில்லை.

OD- இதர பணி- என்ற பெயரில் ஊழல் மாறவில்லை. LD-மாற்றுப்பணி என்ற பெயரில் ஏமாற்றுவேலை மாறவில்லை.

கழகக் கட்சி- ஆட்சி என்ற பெயரில் அடிமைத்தனம் மாறவில்லை. கழகக் கட்சி- சங்கம் என்ற பெயரில் சர்வாதிகாரம் மாறவில்லை.

ஆம்! OD என்ற பெயரில் எந்த வேலையும் செய்யாமல் ஊதியம்- ஊழல்- நடைமுறையில் உள்ளது.

தமிழ் நாட்டில் 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 75 பேர் வேலை செய்யாமல் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நபருக்கு 10,000/- ரூபாய் என்று வைத்துக் கொண்டால், மொத்தம், (8@75@=600@10,000=60,00000) மாதம் ஒன்றுக்கு 60 லட்சம் ரூபாய் இழப்பு ! இதுவே, ஆண்டொன்றிற்கு 7 கோடியே 20 லட்சம் போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊழல் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது என்று குறிப்பிட்டு, 1990-2010 வரை 500 நபர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு 1200000000 ரூபாய் என்று ஒரு அட்டவணையும் தரப்பட்டுள்ளது.

புதிதாகப் பொறுபேற்றுள்ள புதிய அரசு இவ்வூழலைத் தடுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற த.ல.கொ.இயக்க வேண்டுகோளை நாமும் வழிமொழிவோம்.


தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கம், மக்கள் நினைத்தால்.. என்ற மாத இதழை நடத்தி வருகின்றது. ஜுன், 2011 இதழில் வெளியான தகவலை அப்படியே தந்துள்ளேன். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

அவர்களது முகவரி:- 53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர், அம்பத்தூர், 600053.

0 comments:

Post a Comment

Kindly post a comment.