முனைவர் இ.கோமதிநாயகம் வழங்கும் சித்தர்கள் காட்டும் வாழ்வியல் கல்வி
சித்தி என்ற சொல்லுக்கு ,
"அறிவு, சிந்தித்தல், நிறைவேற்றல், நித்தியை யோகத்துள் ஒன்று" என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். முக்தி வழி, "சித்தி நெறி" எனப்பட்டது. விசுவாமித்திரர் தவமும் யாகமும் செய்த இடம் "சித்தாசிரமம்" எனப்பட்டது. மன ஒடுக்கம், "சித்தலயம்" எனப்பட்டது. சித்தர்கள், "சித்தாதிகள்" எனப்பட்டனர். இவர்கள் அணிமா முதலிய கலைகள் கைவரப்பெற்றவர்கள். சித்தர்கள் அனைவரும் கையாண்ட மொழி தமிழே ஆகும்.
"ஆடு பாம்பே- எழுந்தாடு பாம்பே" என்று ஒவ்வொரு பாடலின் முடிவிலும் பாடியுள்ளதால் பாம்பாட்டிச் சித்தர் எனவும்,
"ஆய்வின்" "
என்று ௧௭௯௨, அகப்பேய்
௨௫௯ ௧௩,
௫ ௬000௧௪ ௧௯0 அறியாதோர் தமிழ் நாட்டில் எவருளர்?
உலகில் பிறக்கும் மனிதக் குழந்தைகளின் , குருடு, உடல் ஊனம் , பால் வேறுபாடு ஆகியவற்றிற்கான காரணிகளைத் திருமூலர், தனது திருமந்திரத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுவதைப்பற்றி நவம்பர், ௨௯, ௨00௯-ல் எழுதியுள்ள வலைப் பதிவைப் பார்க்கவும்.
பூமி பொறுமையையும், காற்று பழகும் பண்பினையும், நீர் விடா முயற்சியினையும், நெருப்பு, தீயனவற்றைப் பொசுக்குதலையும், ஆகாயம் நிலைமாறாத் தன்மையையும் -ஆக பஞ்ச பூதங்கள்- இவற்றைக் கற்றுத் தருவதாக முனைவர் இ. கோமதிநாயகம் சுட்டிக் காட்டுவது சிந்தித்து உணரத்தக்கதோர் உண்மையாகும்.
ஆய்வின் வடிவம், வாழ்வியல் கல்வியின் விளக்கம், சித்தர்கள் பற்றிய குறிப்பு, சித்தர்கள் காட்டும் வாழ்வியல் கல்வி, திருமூலர் காட்டும் வாழ்வியல், தொகுப்புரை ஆக மொத்தம் ஆறு பகுதிகளை உள்ளடக்கிய அருமையான நூல்.
திருமூலர் இயற்றிய திருமந்திரம் காட்டும் "கல்விக் கொள்கைக்குச்" சிறப்பிடம் அளித்தும் தொகுத்த கருத்துக்களை நெறிப்படுத்திக் கூறியுள்ளார்.
இறைவன் வாழும் இடம் மெய்யன்பர்களின் உள்ளமே என்கின்றார் திருமூலர்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்" (திரும்ந்திரம் 1792)
இறைவன் அன்பே வடிவானவன். அவனை அடைய அன்பே வழியாகும் என்பதே திருமூலர் கண்ட திருநெறி.
அன்போடு உருகி அகங்குழைவார்க்கு அன்றி
என்போல் மணியினை எய்தவொண்ணாதே." (திருமந்திரம் 259)
"வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகர் சித்தர் கணம்" என்று தாயுமானவர் சுவாமிகளால் பாரட்டப்பெற்ற பெருமைக்குரியோர்,
பதினெண் சித்தர்களாவர்.
வைத்தியம், இரச வாதம், யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகள் வாயிலாக உலக மக்களின் உன்னத வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகின்றனர், தமிழக, சித்தர்கள்.
சித்தர்களுள் முதலாமவரும் முதன்மையானவருமான திருமூலர் வாழ்வியல் நெறிகள் வாய்ந்தவை. இக்காலத்தவர் யாவரும் பின்பற்றத்தக்கவை.
பொதிகை தொலைக்காட்சியில் டாக்டர் ஜெயம் கண்ணன் நாள்தோறும் காலையில் தொடர்ந்து வழங்கிய காட்சிகளே அண்மையச் சான்று.
இன்றைய மக்கட் சமுதாயம் உய்ய , பதினெண் சித்தர்களின் சீரிய வாழ்வியல் கருத்துக்கள் உணர்ந்து பின்பற்றினால் வாழ்க்கை இனிக்கும்.
சாந்தா பதிப்பகம், முத்து விழா இல்லம், 13(5) ஸ்ரீபுரம், இரண்டாவது தெரூ இராயப்பேட்டை, சென்னை-600014. ரூபாய் எழுபது. பக்கம் 190.
0 comments:
Post a Comment
Kindly post a comment.