ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் கல்வி ஆண்டுக்கு இடையில் பணி ஓய்வு பெற்றால், அந்தக் கல்வி ஆண்டின் எஞ்சிய மாதங்கள் முழுவதும் பணியாற்றலாம். இதற்கு அக்டோபர், இருபத்தேழு, ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்து எட்டாம் ஆண்டின் அரசாணை உரிமை அளிக்கின்றது.
ஆனால், சென்னை, வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர் மேனகாவிற்கு இந்த உரிமையினை மறுத்தது. நீதிமன்றம் சென்றார் மேனகா.
ஆசிரியராக இருபத்து எட்டு ஆண்டுகளும், முதல்வராகப் பதினோறு ஆண்டுகளும் பணியாற்றியபோது மேனகாவிடம் எந்த விதமான குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்காத பள்ளி நிர்வாகம், அந்தக் கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதி மறுத்தது தவறு என்று தீர்ப்பளித்தார், நீதிபதி கே. சந்துரு அவர்கள். மேலும், ஜுலை1, 2009முதல்மே31,2010காலத்திற்குரிய ஊதியத்தை எட்டு வாரங்களுக்குள் வழங்கவேண்டும் என்றும் நல்ல தீர்ப்பினைத் தந்துள்ளார்.
மேற்படி கல்வி ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்குப் பணியாற்றாமலேயே ஊதியம் பெறுவார், மேனகா. மொத்தச் சம்பளத்தில் ஓய்வூதியத் தொகை மட்டும் கழித்துக் கொள்ளப்படும்.
முப்பத்தொன்பது ஆண்டுகள் அப்பழுக்கற்று நேர்மையான முறையில் பணியாற்றிய, படித்த, நாட்டுநடப்புத் தெரிந்த பள்ளி முத்ல்வருக்கே இந்தக் கதி என்றால் சாமான்யர்களின் நிலை என்ன?
சமச்சீர்க் கல்விக்குச் சண்டைபோடுவதோடு, அனைத்துப் பள்ளிகளையும் அரசுடைமையாக்கவும் எல்லோரும் போராடலாமே?
அச்சமின்றிப் போராடி வெற்றிபெற்ற மேனகாவையும், நல்ல தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்களையும் மனமாறப் பாராட்டுவோம்.
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.