Sunday, July 31, 2011

பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு

சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த 1919 ம் ஆண்டில் வாழ்ந்தவர் டி. மாண்டி. இவர் போர்ச்சூக்கிய நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ( ராஜா அண்ணாமலை புரம் ) இடங்களை கத்தோலிக்க சபைக்கு உயில் எழுதி , இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை ஏழை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த ஆவணத்தில் கூறியுள்ளார். இந்த நிலங்கள் சபையின் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடி ஆகும். அதாவது எம்.ஜி.ஆர்., காலத்தில் பலம் மிக்கவராக இருந்து வந்த ஜேப்பியார், மற்றும் எம்.ஜி.எம்,. நிறுவனத்திற்கு இந்த இடங்களை 95 ஆண்டு காலம் வரை நீண்ட கால ஒத்திகைக்கு மறைமாவட்ட சபை வழங்கியுள்ளது.


இதற்கு காரணமான பிஷப் , ஜேப்பியார், குமார், லாரன்ஸ், கபீர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் போலீசாரிடம் வழங்கினார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளனர். நிலமோசடிக்கென உருவாக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கத்தோலிக்க சபையை பொறுத்த மட்டில் மறைமாவட்டம் என்றும் , அந்தஸ்து கொண்ட உயர்மறைமாவட்டம் என்றும் இரு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையும், சென்னையும் உயர் மறைமாவட்டம் ஆகும்.


இதற்கிடையில் இந்த நிலங்கள் தொடர்பாக ஏற்கனவே எழுந்த சர்ச்சையின் கீழ் சபைக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று சபை தரப்பில் கூறப்பட்டாலும், ஆவணங்கள் முறையாக இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.