Tuesday, July 26, 2011

ஆரவாரமின்றி ஓர் பசுமைப் புரட்சி : திருப்புத்தூரில் "மழைத்துளி'சாதனை

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் 'மழைத்துளி' இயக்கத்தின் சார்பில் வரும் ஆன்டில் மேலும் 100 மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 'பூமி வெப்பமயமாவதை குறைக்க மரங்கள் நடுங்கள்' என்ற கோஷம் பலரின் கவனத்தையும் தற்போது ஈர்க்கத் துவங்கியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர், "மழைத்துளி' அமைப்பினர். வறட்சி பகுதியான திருப்புத்தூர் நகரை பசுமையாக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ள தென்மாப்பட்டு இளைஞர்களின் "மழைத்துளி இயக்கம்'. 'மழைத்துளி'. 'நகரை பசுமையாக்குவதுடன் நீராதாரத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைப்பதே எங்கள் லட்சியம் ' என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

கடந்த 2002 ல் இந்த அமைப்பினர் நட்ட கன்றுகள் வளர்ந்து தற்போது மரங்களாக நிற்கின்றன. மரக்கன்றுகளை நட்டதுடன் விட்டு விடாமல் பாதுகாப்பாக இரும்புக் கூண்டை வைத்து தண்ணீர் ஊற்றி, அருகிலுள்ளவர்களை ஊக்கப்படுத்தி அவர்களையும் தண்ணீர் ஊற்ற வைத்து மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். தங்களது இல்லத் திருமணங்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர். 9 ஆண்டுகளில் இவர்களால் பல நூறு மரக்கன்றுகள் நடப்பட்டாலும் தற்போது ரோட்டோரங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அமைப்பின் தலைவர் காமராஜ் கூறுகையில் ' எங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு சுமார் 100 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். தற்போது இரும்பு கூண்டுகள் விலை உயர்ந்து விட்டதால் எண்ணிக்கையை அதிகரிக்க இயலவில்லை.' என்கிறார்.

இத்துடன் நகரின் நிலவரங்களை வெளியூர்களில் இருக்கும் திருப்புத்தூர் வாசிகள் தெரிந்து கொள்ள ( www.thirupputhur.co.in )என்ற இணைய தளம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

மரம் வளர்க்க விரும்புவோர் ல் 94436 11342 ல் 'தொடர்பு கொள்ளலாம்.

3 comments:

  1. மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம் .....

    ReplyDelete
  2. எனது மாவட்டத்தில் இது போன்ற நல்ல சேவைகள் நடந்து வருவது பெருமையாக இருக்கிறது......அறிய உதவியதற்க்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. பச்சை செல்லும் மற்றும் பூமியின் குறைதல் இயற்கை ஆதாரங்கள் சேமிப்பு முக்கியத்துவம் பற்றி ரஜினி பேச்சு. இங்கு இருக்கும் வைத்திருக்கவும்
    http://bit.ly/n9GwsR

    ReplyDelete

Kindly post a comment.