மூட்டாவில் ரூ.30 கோடி மோசடி?எஸ்.பி.யிடம் பேராசிரியர் புகார்
மூட்டாவில் 30 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக கூறி, விசாரணை நடத்த வேண்டும் என, நாகர்கோவில் எஸ்.பி.யிடம் பேராசிரியர் புகார் கொடுத்துள்ளார்.மதுரை காமராஜர் பல்கலை மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர் கூட்டணியான மூட்டாவின் குமரி மாவட்ட கிளையில் உறுப்பினராக இருப்பவர் சுந்தர்ராஜ். இவர் சில பேராசிரியர்களுடன் அருண் எஸ்.பி., சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியுள்ளதாவது: சங்க உறுப்பினரான எனக்கு வரவு, செலவு கணக்கு நகல் தரும்படி கேட்டும் தரவில்லை. புதிய சம்பளம் அமல்படுத்த பட்டபோது 600 ரூபாயும், தேர்தல் நிதியாக ஐந்தாயிரம் ரூபாயும், மேல்சபை தேர்தல் வர இருப்பதாக கூறி, ஆயிரம் ரூபாயும் கட்டயாமாக வசூலித்தனர். இதுபற்றி கணக்கு கேட்ட போது, என்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 12 ஆண்டுகளாக மூட்டாவில் எந்த கணக்கும் காட்டப்படவில்லை. 30 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருக்கும் என்று
தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்காக ஆசிரியர்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூலித்தது, தேர்தல் விதிகளுக்கு முரணானது. எனவே, பேங்க் பாஸ்புக் மற்றும் செக் புத்தகங்களை வாங்கி, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கணக்குக் கேட்டால் விலக்குவதுதானே பதவியில் உள்ளோர் கடைப்பிடிக்கும் நீதி! அர்சியல் கட்சியாக இருந்தால் என்ன ? தொழிற்சங்கமாக இருந்தால் என்ன?
0 comments:
Post a Comment
Kindly post a comment.