Wednesday, January 12, 2011

பாசிட்டிவ் அந்தோணிமுத்து தோற்றத்தில் விவேகானந்தராகிவரும் காடகனூர் சாமியாரின் வலைப்பூ


வயிறு வளர்க்கும் கல்வி வேண்டாம்; அறிவை வளர்க்கும் கல்வியே இளைஞர்க்கு வேண்டும் என்று சமூகச் சிக்கல்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றார், ஓர், துறவி !

நரிக்குறவர் ரங்கா, திருநங்கை விமலா, பாலியல் தொழிலாளி ராஜேஸ்வரி, பிச்சைக்காரர் குபபுசாமி, சிறைக்கைதி ரமேஸ், ராணுவ அதிகாரி வின்சென்ட், லாரி ஒட்டுநர் ஆரோக்கியசாமி, தேச சஞ்சாரி வேதாந்தபுரி ஆகியோரது அனுபவங்களையும் கேட்டறிந்தவர்.

௧௯௮௭-ல் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர், இந்தச் சாமியார். டாக்டர் புருஷோத்தமனால் காப்பாற்றப்பட்டார். (௧௫-0௭-௧௯௮௭)

இளமையில் இளம்பிள்ளைவாதத்தால் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் செயலிழந்துவிட்டன. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவும் முடியவில்லை.

ஊமையன் என்ற சித்த புருஷரின் தீண்டுதலால் ஆட்கொள்ளப்பட்டு ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டார்.

சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் இலக்கணம் முதலியவற்றைத் த்க்கோரிடம் பயின்று தகுதியை உயர்த்திக் கொண்டார்.

பல்பொருள் அங்காடி, தங்க வியாபாரம் செய்த அனுபவமும் உண்டு.

மார்க்சியச் சிந்தனைகளில் ஆர்வங் கொண்டு கம்யூனிஸ்ட் மிதவாத, தீவிரவாத இயக்கங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்ற காலக்கட்டமும் இவரது வாழ்க்கையில் உண்டு. பின் காங்கிரஸ் சேவாதளத் தொண்டராகவும் செயல்பட்டிருக்கின்றார்.

இவற்றில் எல்லாம் திருப்தி அடையாத நிலையில், ஆன்மிக, சாஸ்திரப் ப்யிற்சிகள் மூலம் அமானுஷ்ய அனுபவங்கள் அடைந்திருக்கின்றார்.

மஹா அவதார் ஸ்ரீமத் ருத்ரபரமஹம்ஸர் மூலமாக, இறுதியில், யோஹி ஸ்ரீராமனந்த குருவாகப் பிறபெடுத்திருக்கின்றார்.

ஆசிரமம் உண்டு. ஆத்மார்த்தமான சமூக நலத் தொண்டுகளால் பொழுதளந்து வருகின்றார்.

பெற்ற விருதுகள்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலைமாமணி விக்ரமன் முன்னிலையில் புதியப் பார்வை ஆசியர் டாக்டர் மா. நடராஜன் அவர்களிடமிருந்து பாரதி பணிச்செல்வர் விருது, சிங்கப்பூரைச் சேர்ந்த அசன்டாஸ் நிறுவனம் சார்பில் தமிழக ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடமிருந்து வாழுங்கலை சாதனையாளர் விருது, அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் சென்னை மாநகர மேயர் மா.பாலசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து ஆன்மீக சேவா ரத்தினா விருது, தமிழ்நாடு சினிமா கலைமன்றம் சார்பில் மாநில தலைமை தேர்தல் ஆனையர் சந்திரசேகரன் முன்னிலையில் நடிகர் சாருஹாசனிடமிருந்து தத்துவப் பேராசிரியர் விருது

சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளோடு செயல்படும் இவருக்கு கணினி விவகாரமெதுவும் தெரியாது. ஆனால், http://ujiladevi.blogspot.com/2010/07/blog-post_22.ஹ்த்ம்ல் என்ற வலைப்பூவிற்கு ஆசிரியர் இவர்தான். உத்வுவது சதீஷ் குமார். இவரது வலைத்தளத்தில், ஆன்மிகம், அரசியல், கதை, கவிதை எல்லாமே உண்டு.

யோகி ஸ்ரீஇராமானந்த குரு
மஹாஸ்ரீ இராமானந்த குருமடம்
ஸ்ரீநாராயணா மிஷன்
விழுப்புரம் சாலை
காடகனூர் அஞ்சல் 605755
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு
தொலைபேசி எண் 9442426434

மின்னஞ்சல்:- sriramanandaguruji@gmail.கம

எனது வலைப்பூவைப் பின்தொடர்வதாக, ௨௭-0௬-௨0௧0-ல் அனுப்பிய மின்னஞ்சலை இன்றுதான் பார்த்தேன்.

இன்று விவேகானந்தர் பிறந்த தினம். எனக்கு மனநல மருத்துவராகத் திகழ்ந்த என் நினைவில் வாழும் வலைப்பதிவாளர் அந்தோணி முத்துவின் மறு பிறவியாவே இவரைக் கருதுகின்றேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலின் குணசேகரின் கட்டுரையை இன்றைய தினமணி, விடுதலைக்கு விதை தூவிய வித்தகர் என்னும் தலைப்பில், விவேகானந்தர் நினைவாக அச்சேற்றியுள்ளது.

வலைப்பூ
மின்பக்கத்தில் விவேகானந்தர் சொல்லியபடி வாழ்ந்து வருகின்ற
யோஹி ஸ்ரீ ராமானந்த குரு வைப்பற்றி எழுதியதில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி.

தகவல்கள்னைத்தும் அவரது வலைப்பூவிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது.

2 comments:

  1. சாமியாரின் வலைப்பதிவை வாசித்து இருக்கிறேன். நல்லக் கருத்துகளாக இருந்தாலும் கொஞ்சம் இந்த்துவ வாசனை அடிக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து

    அவருக்கு எனது பாராட்டுகள்

    ReplyDelete
  2. அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஜாதீய, ஊழல் இயல்புகளைச் சகித்துக் கொண்டுதானே வாழ்கின்றோம். பிற மானுடர்களைப் போல் எழுந்து நடமாட முடியாத அவரிடம் உள்ள மானுட நேயத்தை மட்டுமே நாம் பார்த்திடல் வேண்டும்.

    ReplyDelete

Kindly post a comment.