Saturday, January 15, 2011

மின்னஞ்சலில் அனிமேசன்ஸ் இடம் பெறச் செய்ய :- ரிஸ்க் ஃப்ரீ ட்ரையல் பார் தர்டி டேஸ்.

முதலில், IncrediMail இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும். incredimail2 டௌன்லோட்-தரவிரக்கம் செய்து சேமிக்க வேண்டும். இதன்பின் கணினியின் கீழ்ப் பகுதியில் உள்ள அடிக்குறியீடுகளில் அஞ்சல் உறை ஒன்று உருவாகிவிடும். அதன்பின் அந்த உறையை கிளிக் செய்தாலே போதும். அவரவர் மின்னஞ்சலைத் திறந்து பார்க்க வேண்டிய்தே இல்லை.

மேற்படி உறயை கிளிக் செய்தால், கணினித் திரையில், நியூ மெசெச் கட்டம் தோன்றும்.அதில் வழக்கம்போல் மின்னஞ்சல் செய்திகளை தட்டச்சசெய்திட வேண்டியதுதான்!

மேற்படி திரை அருகில், ஓர், ஸ்டைல் பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். அதன் மேற்பகுதியில், லெட்டர்ஸ், இ கார்ட்ஸ், அனிமேசன்ஸ், சவுண்ட், என்ற நான்கு பிரிவுகள் இருக்கும். அதன் கீழே இடது புறமாக, காரக்டர்ஸ், எபெக்ட்ஸ், எமோஷன்ஸ், மிடி ஈவன்ட்ஸ், ம்யூசிக், Quotes, முதலிய குறிப்புக்கள் இருக்கும். அவற்றில் தேவையானவற்றைக் கிளிக் செய்து மின் மடலில் இடம்பெறச் செய்யலாம். Quotes- கிளிக் செய்தால் தேங்க்ஸ் ஒலித்திடச் செய்யலாம். இதனை ஒரு முறையோ/ பல முறையோ ஒலித்திடச் செய்ய முடியும். இவற்றை நம் மின்னஞ்சல் செய்திகளுக்குக் கீழே இடம் பெறச் செய்யலாம். எல்லாம் கலர்புல்லாக-வண்ண மயமாக இருக்கும்.

இது இலவசம் என்று நினைத்து டௌன்லோட் செய்து விட்டேன். பின்னர்தான், முப்பது நாட்கள் ட்ரையல் என்று தெரிய வந்தது. முப்பது நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கிவிடலாம்.

பல்வித அனிமேஸன்சை-இசை, நன்றி அறிவிப்பு ஓசை முதலியவற்றை இலவசமாக நமது மின்னஞ்சலில் இடம் பெறச்செய்து நண்பர்களை மகிழ்ச்சிப் படுத்தினால் என்ன தவறு வலைப்பூ அன்பர்களே?

0 comments:

Post a Comment

Kindly post a comment.