Sunday, March 21, 2010

விதை ஒன்று போடச் சுரை ஒன்றா முளைக்கும்?

விதை ஒன்று விதைக்க சுரை ஒன்று முளைக்குமா?

‘விதை ஒன்று விதைக்க சுரை ஒன்று முளைக்குமா?’ என்பது அன் நாளைய வழக்குச் சொல். ஏன் முளைக்காது? இதோ இந்தக் கதையைக் கேளுங்கள்.

தபால் அலுவலகம் ஒன்று. அதில் சரியாக விலாசம் எழுதப் படாத கடிதங்களை நன்றாக சோதித்து சேர வேண்டியவருக்குச் சேர்க்க வேண்டிய பணியில் ஒரு ஊழியர்.

ஒரு நாள் கடிதம் ஒன்று வந்தது ‘எனனையாளும் இறைவனுக்கு’ என விலாசம் எழுதி. கடிதத்தைப் பிரித்துப் படித்தார் அவர். அதில் எழுதி இருந்தது வருமாறு

‘என்னை ஆளும் இறைவனே நான் ஒரு 83 வயதினைத் தாண்டிய விதவை. எனக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறேன். நேற்று என் பணப் பையை யாரோ ஒருவன் திருடிக் கொண்டு போய் விட்டான். அதில் இருந்த ரூபாய் நூறில்தான் அடுத்த மாத ஓய்வூதியம் வரும் வரை காலம் தள்ள வேண்டும் நான். இதன் நடுவில் இன்னும் பத்து நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. அதற்கு எனது பால்ய ஸ்னேகிதிகள் இருவரை சாப்பிடக் கூப்பிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு என்ன விருந்தளிப்பேன் என்று தெரிய வில்லயே ஈசா. நீதான் எனக்குத் துணை புரிய வேண்டும்.

இப்படிக்கு உன்னை நம்பி இருக்கும்
வள்ளியம்மை.

தபால் நிலைய ஊழியரின் கண்கள் பனித்தன. கடிதத்தை சக ஊழியர்களிடம் காட்டினார். அனைவரும் கிழவிக்கு உதவி செய்யத் தீர்மானித்து தங்கள் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் சேர்த்தனர். ரூபாய் தொண்ணூத்தி ஆறு தேறியது. அதை மணி ஆர்டரில் கிழவிக்கு அனுப்பின்ர் கூபனில் இந்த வாசகத்தோடு, ‘உன் கடிதம் கிடைத்தது. நீ கேட்டிருந்த உதவி இதோ. இப்படிக்கு, உன் கடவுள்.’

இரண்டு நாட்கள் கழித்துத் தபால் அலுவலகத்துக்கு கடவுள் பெயருக்கு மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

அன்புக் கடவுளே காலத்தில் நீ செய்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன். ஆனால் ஒன்று நீ அனுப்பிய பணத்தில் நான்கு ரூபாய் குறைவாக இருந்தது. கட்டாயம் அது அந்தத் தபால் நிலயத்தில் பணி புரியும் பத்துத் திருடர்களில் ஒருவன் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

உன்,
வள்ளியம்மை

(இது இன்று நான் பார்த்த ஒரு ஆங்கிலக் கதையைத் தழுவியது)

கல்பட்டு நடராஜன்
--

0 comments:

Post a Comment

Kindly post a comment.