.jpg)

இந்தக் கேள்வியை எழுப்பி பதிலும் தருகின்றர்ர், ஜப்பானைச் சேர்ந்த
யூகோ நிஷிமுகோ.
வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்குப் பதிலாக அடுத்த தேர்தலின்போது வீடு தோறும் டாய்லட் கட்டிக் கொடுப்பதாக வாக்களித்தால் குறைந்தபட்சம் 65% குடும்பங்கள் நிஜமாகவே பலன் பெறும். நாடு நலம் பெறும்.
சென்னை கோவளம் pபாதையில் காரில் பயணிப்போர்க்குத் தோன்றாத எண்ணம் யூகோ நிஷி முரா- டேவ் போக் மேன் ஜப்பானியத் தம்பதியருக்குத் தோன்றியது.
குப்பங்களில் இருக்கும் பெண்கள் இருட்டான நேரங்களில் புதர் மறைவைத் தேடியும், பகலில் கடும் அவஸ்தைகளையும் சந்திக்க வேண்டியிருப்பது குறித்துச் சிந்தித்துக் கவலைப் பட்டனர்.
ஜப்பன் அரசு அமைப்பு -ஜெய்கா-ஜப்பான் இன்டெர்னேஷனல் ஏஜென்ஸி பல வெளி நாடுகளிலும் சேவை செய்து வருகின்றது.ஓவர்சீஸ் டெவலப்மென்ட் எய்ட் என்ற பிரிவின் கீழ் சேவையில் ஜப்பானிய மாணவர்களோடு இங்கு பணியாற்றி வருகிறார்..
கோவளம் பகுதியில் 10000+2000+2000+=14000. செலவில் டாய்லட் உருவாகின்றன. 10000ம் ஜப்பானியரும், 2000ம் வீட்டு உரிமையாளரும், கிராமப்பஞ்சாயத்து மூலம் 2000மும் பங்கிடப் படுகின்றது.
மனிதக் கழிவின் மீது சாம்பலைத் தூவி உரமாக்கப்படுகின்றது. ஓராண்டிற்குபின்புதிய டாய்லட் பயன்படுத்தப் படுகின்றது.
www.ecosan.b1b2.org இந்தத் தகவலை முழுமையாகத் தருகின்றது.
மேற்படி ஜப்பானிய ஜோடிகளைப் பேட்டி கண்டபின், மதியச் சாப்பாட்டை முடிக்கலாம் என்று, தினமணி நிருபர் தமிழ் மகனும், புகைப்பட நிருபர் ஏ.எஸ். கணெஷும் டைனிங் டேபிளில் அமர்ந்தபோது, அந்த ஜோடிகள் தந்த புத்தகம் மனிதக் கழிவின் மாபெரும் தேவை! என்பதாகும்.
world toilet organisation, singapore உலகம் முழ்வதும் சேவை செய்வது இந்த
வலைப் பதிவில் முன்னரே பதிவு செய்யப் பட்டு விட்டது.
சமரசத்தை உலவச் செய்து கொள்ளச் செய்துகொள்ளும் சட்ட- பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை குறந்தபட்சம் toilet கட்டிடப் பயன்படுத்தினால்கூட, வெளி நாட்டுக்காரர்கள் வந்து அடிப்படைச்
சுகாதாரவசதியை ஏற்படுத்தித்தரும் அவலம் நீங்கும்.!
0 comments:
Post a Comment
Kindly post a comment.