Monday, January 11, 2010

கலைஞரின் இரட்டை வேடம்-யாருக்கும் வெட்கமில்லை!


தினத்தந்தி-10-01-2010-பக்கம்-3- இடதுபுறம் தலைப்புச் செய்தி.

கருத்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
என்னைப்பற்றிப் புகழ் பாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்!!
சட்டசபையில் கருணாநிதி வேண்டுகோள்!!!

தினத்தந்தி-10-01-2010-பக்கம்-5- இடதுபுறம் தலைப்புச் செய்தி.

திருட்டு வி.சி.டி.-யை ஒழிக்க கடும் நடவடிக்கை!
கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் பாராட்டுவிழ!!
சென்னையில் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது!!!

இது என்ன கூத்து! "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"- என்று சொன்ன தமிழன்-மெய்யாகத் தமிழை வளர்த்தவர்- பட்டிதொட்டிகளுக்கும் பார்முழுமைக்கும் சுதேசிப் பேப்பரில் தமிழை உலா வரச் செய்தவர்- பண்டிதத் தமிழைப் பாமரனுக்குச் சொந்தமாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர்- தினத்தந்தியின் நிறுவனர் ஆதித்தனார் பத்திரிக்கையில் இரு வேறு முரண்பட்ட செய்திகளா?

சொன்னதச் செய்யும் கலைஞர்- செய்வதையே சொல்லும் கலைஞர் நிச்சயமாக பாராட்டுக் கூட்டத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கமாட்டார். தந்தி அவசரப்பட்டுத் தவறான தகவலைத் தந்துவிட்டதா / சட்டசபையில் கலைஞ்ர் பேசியது பொய்யா விசாரித்துச் சரியான தகவலைப் பொதுமக்களுக்குத் தந்திடவேண்டும் தந்தி!

இல்லை ஆள்வோருக்குச் சாமரம் வீசுவதுதான் கொள்கை என்றால், குறைந்த பட்சம் வெவ்வேறு நாட்களிலாவது இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும் தினத்தந்தி நிர்வாகம்!

காலங்கள் மாறும்! தீர்ப்புக்கள் திருத்தி எழுதப்படும்! அப்போழுது என்ன செய்யும் தினத்தந்தி நிர்வாகம்?

மக்கள் தினத்தந்தியில் வரும் செய்திகளையே நம்புகின்றார்கள் ,பெரும்பாலும்!
அதுசரி, எடுத்ததெற்கெல்லாம் பாராட்டுவிழாவென்றால் பாராட்டுக்குப் பொருள் என்ன?

திருட்டு விசிடி மட்டும்தான் தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனையா?
பலருக்கு ரேஷன் கார்டு இல்லை. வாக்காளர் அடையாள அட்டை இல்லை. 5 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து குடியிருப்பவர்களுக்கு பட்டா என்பது வெறும் குரலாக மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ............பலப் பல...

0 comments:

Post a Comment

Kindly post a comment.