இரண்டு ஆண்டுகளுக்கு்ம் மேலாகத் தொடர்ந்தது, நடிகை கீதுமோகன் தாஸ்- ராஜிவ் ரவி நட்பு! காதலாகித் திருமணத்தில் முடிந்தது. கடந்த 14-11-2009-ல் கேரளமாநிலம் கொச்சியில் திருமணம் நடைபெற்றது.
மலையாள நடிகை கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவான" KELKKNMUNDO" (ARE YOU LISTENING) என்ற குறும் படம், இந்தியாவில் நிகழ்ந்த சர்வதேசக் குறும் படப் போட்டியில் முதலிடம் பெற்றது. 26-நாடுகளில் இருந்து போட்டிக்கு 206 குறும்படங்கள் வந்திருந்தன. GOLDEN LAMP TREE AWARD கிடைத்துள்ளது. ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை பரிசாகக் கிடைத்துள்ளது.
பார்வை இழந்த 5 வயது் பெண்சிறுமியின் பயணத்தைப் பற்றியதே கதையாகும். 22 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தில் நடித்துள்ள சிறுமியின் பெயர் " ஹஸ்னா" !
உலகில் இன்னும் பல இடங்களில் நிகழப்போகும் குறும்படப் போட்டிகளுக்கும் இதனை அனுப்பப்போவதாகவும் கீது கூறியுள்ளார்.
தாராளமாய் அனுப்பட்டுமே! பரிசு கிடைத்தால் அவருக்கு மட்டுமா பெறுமை. நமது தாய்த் திரு நாட்டிற்கும் தானே!
Sunday, December 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.