பகை கடிவாய் நன்னெஞ்சே! பகை கடிவாய்!
ஆயிரம் உண்மைகளை அள்ளிவீசி்
ஐக்கியத்தைப் பிரித்ததோர் சிவப்புக்கட்சி!
பிரித்தோர்பால் தொடர்ந்தி்ட்ட காதலினால்
பிழையின்றிக் கொடுத்து வந்தான் உழைப்பதனை!
அவனிருக்கு மிடத்தினிலே இருந்த சங்கம்
அவர்களுக் கிழப்பாய்ப் போனதாலே
காத்திருந்து கால நேரம் பார்த்து
ஆத்திரதத்தை தீர்த் ததவனை அடித்துதைத்து!
உழைத்த வனைப் பழிவாங்க நினைத்த கூட்டம்
அழைத்திட்ட சூதறியா அந்தத் தொண்டன்
அடித்து தைத்து அவமதித்த நாளில் கூட
படியேறிச் செல்ல வில்லை காவல் நிலையம்!
தாக்கியவன் எதிர்காலம் கருத்திற் கொண்டான்
பாக்கியுள்ள குடும்பத்தையும் நினைவு கூர்ந்தான்!
பழிக்குப் பழி எண்ணம் துளியும் இல்லை
பாவம் அவன் துயர் துடைக்க யாருமில்லை!
வன்முறைக்கு வன்முறைதான் தீர்வல்ல என்றெண்ணி
அன்பெனும் உணர்வுடனே மௌனி ஆனான்!
சுற்றி வந்தான் தமிழ் நாடெங்கும் தாடியுடன்
உற்ற நண்பர் பேணியது தாய்க்கும் மேலாய்!
தீ்யைத் தீ் அணத்திடா தென்பதவன் பால பாடம்
தீயோர் மாறு் வோறென்றெ ண்ணி ஏமாந்தான்!
காலங்கள் மாறு மொருநாள் நிச்சயமாய்
தீர்ப்பதனை மாற்றி எழுதும் ஐயமில்லை
ஆறு மனமே ஆறு...
0 comments:
Post a Comment
Kindly post a comment.