நாஸ்ரதீன் ஹாஸ் ஓர் ஞானி! ஆன்மிக வாதி. துருக்கிய அதிகாரி ஒருவர் ஞானியை விருந்துண்ண வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இவரும் ஒப்புக் கொண்டார். அதிகாரியின் வீடு நெடுந்தொலைவில் இருந்தது. கழுதை மீதேறிப் பயணித்தார். அதிகாரியின் வீட்டை அடைந்த போது மிகவும் களைப்புடன் காணப்பட்டார். உடையும் மிக அழுக்காக இருந்தது. அதிகாரிக்கு ஞானியை அடையாளம் தெரியவில்லை. வீட்டு வாயிலிலேயே ஞானி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முற்படும் முன்பே, பிச்சைகாரர்களுக்கு் இங்கே அனுமதி இல்லை. என்று கடுமையாகக் கூறி உள்ளே சென்று வி்ட்டார், அதிகாரி.
ஹாஸுக்கு் அவர் கொண்டு வந்திருந்த மாற்று உடை கை கொடுத்தது. சிறிது தூரம் வெளியே சென்றுவிட்டு, அவற்றை அணிந்து அமர்க்களமாகத் திரும்பி வந்தார். இப்போது அதிகாரி ஹாஸை கனிவுடன் வரவேற்றார். நன்கு உரையாடினார். பல்சுவை உணவும் பரிமாறப்பட்டது.
ஞானி, ஒரு சூப் கிண்ணத்தை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் ஊற்றினார். சில கறி வறுவல் துண்டுகளை தலைப்பாகைக்குள் திணித்துக் கொண்டார். தான் அணிந்திருந்த அங்கியின் கீழ்ப் பகுதியை புலால் இருந்த தட்டில் படும்படிச் செய்தார். அங்கியே தின்னு ..தின்னு.. என்றார். அனைவரும் திகைத்துப் போயினர். அதிகாரிக்கோ. கோபம் தலைக்கேறி விட்டது.. என்ன செய்கிறீர் என்று கோபத்துடன் கேட்டார்.
அதற்கு, அந்த ஞானி, சாந்தமாக, சற்று நேரத்திற்கு முன் தாங்கள் உபசரித்தது என்னையல்ல; என் ஆடைகளைத்தான்; என்வே அவற்றிற்கு உணவு ஊட்டுகின்றேன் ; என்று மறு மொழி பகர்ந்தார். அதிகாரியும் தவற்றினை உணர்ந்து மன்னிப்புக் கோரினார்.
ஆம். உருவு கண்டு எள்ளாமை வேண்டும். இல்லாமற் போனால் பலவற்றை நாம் இழக்க நேரிடும். சரிதானே, வ்லைப் பூ் நண்பர்களே!
விகடகவி தமிழ் மாத இதழ். vikatakavi_chennai@yahoo.com
Sunday, December 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.