காந்திஜி மெட்ரிகுலேஷன் வகுப்பில் வாங்கிய மதிப்பெண்களின் பதிவேட்டின் பிரதி ஒன்று உள்ளது.
ஆங்கிலம். 89/100
கணக்கு 59/175
அறிவியல் 45/100
பூகோளம் 34/75
சரித்திரம் 20/75
சரி்த்திரப் பாடத்தில் மிகக் குறைவான மதிப்பெண் வாங்கிய காந்திதான்
இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி எழுதினார். உலகம் இன்றளவும் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றது.
ஆகவே, என்னதான் முயன்றாலும், சிலருக்குப் படிப்பு வரவில்லையென்றால்,
மதிப்பெண்கள் குறைந்தால் கவலைப் படவேண்டாம்.
சில மனிதர்களின் விறுப்பு வெறுப்புக்குட்பட்ட இணத்த/ நீக்கிய பாடங்களைக் கொண்ட புத்தகங்களில் அச்சடிக்கப் பட்டவற்றை அப்படியே மனப்பாடம் செய்து, அதை அப்படியே ஒரு வெள்ளைத் தாளில் எழு்தச் செய்து, அதற்குப் போடப்ப்டும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் மனித வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை.
மேலும், நேர்முகத் தேர்வுகளில், வெற்றியைக் கல்வித்தகுதி மட்டும் தீர்மானிப்பதில்லை.
கருத்துக்களத் தெளிவாகப் பரிமாறிக்கொள்ளும் பேச்சாற்றல், பிரச்சினகளைக் கண்டு பயந்தோடாமல் -தள்ளிப் போடாமல் உடனுக்குடன் சரியான முடிவெடுக்கும் திறமை போன்றவைகள்தான் தீர்மானிக்கின்றன.
"ஏட்டுச் சுரைக்க்காய் கறிக்கு உதவாது"-
ஆம்! வாழ்க்கையின் வெற்றி/தோல்வி பள்ளி/கல்லூரி படிப்பை மட்டும் சார்ந்தது அல்ல.
விகடகவி-தமிழ் மாத இதழ். vikatakavi_chennai@yahoo.com
0 comments:
Post a Comment
Kindly post a comment.