Sunday, November 29, 2009

உலகம் போற்றிடும் நல்ல தீர்ப்பு! லண்டனில்!



UNCLE OF 5-YEAR-OLD MENINGITIS VICTIM JAILED FOR STEALING FROM HER TRUST FUND
Story Image
Uncle of 5-year-old meningitis victim jailed for stealing from her trust fund
Friday November 27,2009 By John Chapman
THE uncle of a five-year-old girl who lost her arms and legs to meningitis has been jailed for four years after stealing £315,000 from her trust fund.

தமிழ் நாட்டின் மான்செஸ்டர் எது என்ற கேள்வி பள்ளித்தேர்வில் கேட்கப்படும். அந்த உதாரணத்திற்கு உரிய லண்டன் மான்செஸ்டரில் நல்லதோர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூளை, தண்டுவடம் இவற்றால் பாதிக்கப்படும் நோய்க்கு ஆளாகின்றாள் ஒரு சிறுமி! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலை! வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்ட உதவும் உள்ளங்கள் அள்ளித் தருகின்றன், நன்கொடைகளை! வங்கிக் கணக்கில் குவிகின்றது, பணம்!

காப்பாளராக்கப் படுகின்றார், குழந்தையின், மாமா,DARAEN PEASE!ஆரம்பத்தில் சரியாக இருந்தவர், பின்னர் ஜகதலப் பிரதாபனாகின்றார். உண்மை ஓர்நாள் வெளிச்சத்திற்கு வருகின்றது. கைது-நீதிமன்றம்-தீர்ப்பு்-தண்டனை..இத்யாதிகள்; வழக்கம் போல்,தொடர்கதை!
குற்றவாளி சுருட்டிய பணம் முழுவதையும் வங்கி திருப்பித் தந்து விடுகின்றது. இதுதான் சிறப்பம்சம்.இந்தியாவில் இதுபோல் நடக்குமா, விரைவாகச், சரியாக?

நல்ல தீர்ப்பினை நல்கிய, நீதிபதியை, பணத்தை வாங்கிக்கொண்டு குற்றவாளிக்கு உதவியாகச் செயல்படாத காவல் துறை மனிதர்களை மனமாறப் பாராட்டுவோம். ELLIE MARY CHALLIS, என்ற அந்த 5 வயதுப் பெண் குழந்தைக்கு எல்லா வல்லமையும் கிட்டுவதாகுக!

வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கவில்லை.விஷயத்தை மட்டும் சொல்லியுள்ளேன். மொழியைவிட மனி்தமே புனிதமானது.(TAMILISH-enRu peyar vaiththathanaal thamizhp paRRu illai enRaa aakividum?) ஏற்றுக்கொள்வீர்களா வலைப்பூ அன்பர்களே?
source:Friday November 27,2009 By John Chapman Sunday Express,london

0 comments:

Post a Comment

Kindly post a comment.