Monday, November 30, 2009

உயி்ருக்கு உரமூட்டும் உயிர்ப் பொருட்கள்- பாரதியின் மனவி செல்லம்மாளின் ஊருக்கருகிலிருந்து--சிவஞான முனி்வரின் புண்ணிய பூமியிலிருந்து

படங்களைப் பெரிதாக்க இங்கே சொடுக்குக

ஒரே ஒரு நாள் மரு்த்துவமனையில் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்க நேரிடுகின்றது. நோயாளியாக இருந்தால், இயற்கை உபாதைககளுக்காகப் பிறரை எதிர்பார்த்தாலே கூச்சமாக இருக்கும்.தாயாக இருந்தாலும் சரி; தாரமாக இருந்தாலும் சரி. மாற்றுப் பாலினருக்குக் கணவராக இருந்தாலும் சரி; வாழ்க்கையிலேயே மிகமிகக் கடினமான செயலாகத் தோன்றும்.நோயாளிக்குத் துணையாகத் தங்குபவராக இருந்தாலும் சிரமம்தான். சொல்லுவது எளிது; செயற்படுவது சிரமம்.பணம் எவ்வளவோ தந்து விடுகின்றேன்; பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் இன்றைய நடைமுறை. பாசமேல்லாம் பேச்சளவில்தான். அத்திபூத்தாற்போல் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கக் கூடும். ஆங்காங்கே இயங்கும் முதியோர் இல்லங்களே அத்தாட்சி. இறுதிக் கடன்களுக்கான கட்டணங்கள் கூட முத்லிலேயே வாங்கப்பட்டு விடுகின்றன, முதியோர் இல்லங்களில்!

வாழ்விலொரு நாளுக்கே இப்படியென்றால், வாழ்நாள் முழ்வதும் பிறர் தயவை எதிர்பார்த்திட வேண்டுமேன்றால் எப்படி இருக்கும்? படுத்த படுக்ககைதான் என்றால், என்ன செய்ய முடியும்? பார்வக்குறைவென்றால் கூட்த்தகுந்த பயிற்சி பெற்றுவிட்டால், ஒருவாறு சமாளித்து விடலாம். பழக்கம் வழக்கமாகிவிட்டால் பார்வை உள்ளவர்களைவிடத் திறம்பட அன்றாடத் தேவைகளப் பிறர் உதவியின்றிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.குறைபாட்டை யாரேனும் சுட்டிக்காட்டினால் கூடக் கோபம் கொப்பளிக்கும், பார்வையற்றவர்களுக்கு!

கை,கால் இழப்பு, வாத நோய்களின் தாக்கத்தால் அல்லது ஏதேனுமொரு பெயர் தெரியாத நோயால் கை,கால்,உடம்பின் ஏதேனும் ஒரு பகுதி இயக்கமின்றிப் போதல்... என்ணிப் பார்த்திடவே நெஞ்சம் அஞ்சுகின்றது. காட்சி ஊடகங்களென்றால் கூடக் கண்ணீர் வடிக்கும் உள்ளம் நேரில் பார்க்கும் பொழுது ஓர் 'உச்'சோடு சரி. மேலும் முதுகுக்கிற்குப் பின்னால், பெற்றோர்/மூதாதையர் என்ன பாவம் செய்தனரோ என்ற புரளிப் பேச்சு வேறு. அதுவும் பிறக்கும் போது ஊனமின்றி இருந்துவிட்டு, ஏதேனுமொரு விபத்தால் இந்த நிலை எய்தியவர்பாடு இன்னும் அதோகதிதான்.ஓடியாடிச் செயல்பட்ட நாட்களை நினைந்து நினந்து நெஞ்சம் இரத்தக் கண்ணீர் வடிக்கும்.

நம் வாழ்க்கையில் வாங்கப்படும் பொருளாக இருந்தாலும்சரி, உருவாக்கப்படும் பொருளாக இருந்தாலும்சரி,அஃறிணை-உயர்திணை எல்லாவற்றையுமே துவக்கத்தில் பேணும்படி கடைசிவரை பேணுவதில்லை.அவற்றில்/அவருக்கு ஏதேனுமொரு குறைபாடு ஏற்பட்டால்தான் அதை/அவரைப் பற்றிச் சிந்தி்க்கத் தொடங்குகின்றோம். இப்படி வாழும்பொழுது, உடல் ஊனம் உற்றவர்களப்பற்றி ஏன் கவலைப்படப் போகின்றோம்?

ஆனால், பிறரைப் பற்றிச் சிந்தித்து உருகும் உள்ளங்களும் உலகில் உள்ளன. இவ்வாறு தனக்கென வாழாப் பிறர்க்குரியவர்களால்தான் உலகம் சுழல்கின்றது; மனிதம் தொடர்கின்றது.
கடுந்தமிழிலிருந்து பாமரத்தமி்ழுக்குக் கொண்டு வந்ததில்/ விடுதலைப் போராட்டங்களில்..ஏன் எல்லாவற்றிலுமே திருநெல்வேலி மாவட்டத்திற்குத் தனிச் சிறப்புண்டு.அதே போன்று மானுட விசுவாசத்திலும் நெல்லைவாழ் மக்கள் முன்னணியில்தான் இருப்பார்கள். ஆம்! இந்த வழியில் ஓர் அன்பு நெஞ்சத்திற்கேற்பட்ட சிந்தனையின் விளைவுதான் ஊனமுற்றவர்களின் து்யர்துடைத்திடக் காரணமாயிற்று.

தமிழ்நாட்டில் ENFIELD IYER என்றால், "தொழில்துறை முன்னோடி" கே.ஆர்.சுந்தரம் ஐயரைத்தான் குறிக்கும். KRS FAMILY என்றாலே தனிச் சிறப்பும் உண்டு; சமூகத்தி்லும்; அவரது பேரன், பார்கவ் சுந்தரம், ஊனமுற்றவர்களின் உற்ற தோழரானார்; சொல்லால், செயலால்,சிந்தனையால்!வடிவமைக்கப்பட்டன, மோட்டாரால் இயங்கும் பற்பல சக்கர நாற்காலிகள். அவரவர் தேவைக்கேற்ப என்பதுதான் தனிச்சி்றப்பு.அவரது வாழ்க்கத்துணைவியார்,ப்ரியா பார்கவ் ஒத்துழைப்பிற்கும் பஞ்சமில்லை.

1998-ல் துவ்க்கப்பட்டது,கல்லிடை மோட்டார் ஒர்க்ஸ், தென்தமிழ் நாட்டின் புனித நதியாம் தாமிரபரணிக்கரை, அம்பாசமுத்திரத்தின் அருகில் உள்ள கல்லிடைக்குறிச்சி்யின் பெயரால்! சைவம் வளர்த்த சிவஞான முனிவர் தோன்றிய புண்ணிய பூமி, கல்லிடைக் குறிச்சி. அவர் இயற்றியருளிய சி்வஞான போததிற்கொப்பான நூல் பிறிதொன்றில்லை. அதே போல் கல்லிடை மோட்டார் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை.

இன்றளவும், 2500-க்கும் மேற்பட்ட நகரும் சக்கர நாற்காலிகள் இந்தியா முழுவதும் பவனிவந்து கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான் நகரும் கருவிகள் உலா வருகின்றன.அனத்தும் மோட்டாரால் இயக்கப்படுகின்றன. அவற்றை அவ்வபொழுது மின்சாரம் மூலம் சக்தியூட்டிக் கொள்ளவும் முடியும். ஊனமு்ற்றவர்களின் அன்றாடத் தேவைகள் அனத்தையும் பூர்த்தி செய்கின்றன.

பிறர் உதவியின்றி தானாகவே அவற்றில் பெரும்பான்மையானவற்றை இயக்கிட இயலும். அவை அவர்களின் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாததொரு அங்கமாகிவிட்டன. உதிரிப் பாகங்களும் தடையின்றி்க் கிடைக்கின்றன்.கார், பஸ், எல்லாவிதமான வேன்கள் இவற்றில் எல்லாம் சுயமாக ஏறி இறங்க,மற்றும் மருத்துவ மனைகளின் தேவைக்கேற்றபடியெல்லாம்; கட்டில்,லிஃப்ட் உட்பட, அலுவலகங்களின் வசதிக்கேற்றவாறெல்லாம் ஊனமுற்றவர்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் இல்லாத வேறுவிதமான மாதிரிகளையும் புதிய முறையில் உற்பத்தி செய்து தரவும் தயாராய் உள்ளனர். இங்கே காணும் படங்களே இவற்றிற்குச் சாட்சியங்களாகும்.இதைப்போன்று் பிறிதொரு கம்பெனி் இந்தியாவில் இல்லை.

தொடர்பிற்கு:-

28, Desika Road, Mylapore
(Near Alwarpet Signal)
Chennai, Tamilnadu 600004
ph: +91 44 2499 1609
fax: +91 44 4212 7432
alt: +91 44 2499 5185
bhargavsundaram@gmail.com


Tamil Nadu - Manoj Enterprises - (23700800, 9894318723)

Andhra Pradesh - Meditron Enterprises - (23234966, 23212642)

Kerala - R&R Enterprises - (9847101457, 242498)

New Delhi - Everest Engineers - (25267151, 9811244660)

Kanpur - Satya Trauma and Maternity Centre- (9415051051 / 52)

Powered Wheelchairs and most of our products are also available for demonstration with the following persons:

Bangalore – Mr.Santhosh – 9900825747

Ahmedabad – Mr Viraj Kansara - 9898084432

Mumbai – Mr Purushottam Dantala – 9821122034


  • http://www.callidai.com/ கல்லிடை.காம் இணையதளம்









  • இவற்றின் விலை அதிகம் என்று தோன்றக் கூடும்.ஆனால் ஊனமுற்றவர்களின் உயிருக்குச் சமமானவை இந்தக் கருவிகள். ஏனெனில், இக்கருவிகள், ஊனமுற்றவர்களுக்கு உயிரூ்ட்டுகி்ன்றன. வசதி படைத்தவர், வாங்கிவிட முடியும்.ஆனால்,வசதியற்றவர்கள்! அறக்கொடை நிறுவனங்கள் தாரளாமாய் உதவலாம். உதவும் உள்ளங்கள் தனியாகவோ/கூட்டாகவோ தேவையானவர்களூக்கு வாங்கித் தரலாம்.

    இந்தத் தகவல்களைக் கட்டுரையாக்கம் செய்யத் தூண்டிய அன்பர், அந்தோணி முத்துவிற்கு
    நன்றியும், வாழ்த்துக்களும்!

    0 comments:

    Post a Comment

    Kindly post a comment.