Saturday, April 29, 2017

வாட்ஸ்அப் தகவல்களை வைத்து பேஸ்புக் செய்யும் காரியம் இது தான்.!


.
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மையில் வாட்ஸ்அப் எவ்வித தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களின் எவ்வித தகவல்களை பேஸ்புக் எடுத்து அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் சார்பில் சொல்லப்படுவது என்ன?

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை மாற்றங்கள் குறித்து அந்நிறுவன வலைப்பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பேஸ்புக்குடன் இணைந்து எங்களது சேவைகளை மேம்படுத்துகிறோம், போலி செயலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், சேவை பரிந்துரைகள் மற்றும் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை பரிந்துரை செய்வது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வாட்ஸ்அப்பில் எந்த தகவல்களை கொண்டு பேஸ்புக் விளம்பரங்களை காண்பிக்க பயன்படுத்துகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கு பதில் அளித்துள்ள வாட்ஸ்அப், ‘பேஸ்புக்குடன் இணைந்திருப்பதன் மூலம் அடிப்படை தகவல்களை கொண்டு போலி செயலிகளை எதிர்க்க வாடிக்கையாளர்கள் எந்தளவு எங்களது சேவைகளை பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்குடன் மொபைல் நம்பரை இணைத்து கொள்வதன் மூலம் சிறப்பான முறையில் நண்பர்களை பரிந்துரை செய்வது மற்றும் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை பரிந்துரை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வாட்ஸ்அப் நம்பர்களை பேஸ்புக்கில் இணைப்பதன் மூலம் எவ்வாறு விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன?

நீங்கள் வாட்ஸ்அப் மொபைல் நம்பரை கொண்டு, அருகாமையில் இருக்கும் கடையின் மெயிலிங் லிஸ்ட்டிற்கு பதிவு செய்து, அதே கடைக்காரர் பேஸ்புக்கில் விளம்பரம் செய்தால் குறிப்பிட்ட கடையின் விளம்பரம் உங்களுக்கு தெரியும். அதாவது கடைக்காரர் விளம்பரம் செய்யும் போது காண்டாக்ட் பட்டியல் ஒன்றை வழங்குவர், அந்த பட்டியல் கோட்களாக மாற்றப்படும். இதனால் பேஸ்புக் காண்டாக்ட் பட்டியலை விளம்பரம் வழங்குவோரிடம் இருந்து பெறாது.

வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட விளம்பரத்தை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதை மட்டும் விளம்பரதாரர்களுக்கு தெரிவித்து, அவர்களின் எவ்வித விவரத்தையும் வெளிப்படுத்த மாட்டோம் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக பேஸ்புக்கில் ஒருவர் விளம்பரம் செய்ய வரும் போது, அவர் தரப்பில் காண்டாக்ட் பட்டியல் ஒன்றை பதிவேற்றம் செய்ய முடியும். பின் இந்த பட்டியல் கோட்களாக மாற்றப்பட்டு அவர்களுக்கு விளம்பரங்களாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் பேஸ்புக் உங்களது காண்டாக்ட் தகவல்களை பெறாமல், வெறும் கோட்களை மட்டுமே வாட்ஸ்அப்பில் இருந்து பெறுகிறது என தெரிவித்துள்ளது.  -மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.