Sunday, April 30, 2017

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் தி பரமேசுவரி

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு 
1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம் விளக்கு. பெற்றோர் பொன்னுசாமி கிராமணியார் - சிவகாமி அம்மாள்.
ம.பொ.சி. - மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

அரசியல் 
உறுப்பினர், தமிழ் நாடு காரியக்கமிட்டி (1951-52)
துணைச் செயலாளர், சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டி(1936-37)
செயலாளர், சென்னை ஜில்லா காங்கிரசுக் கமிட்டி (1947-48)

தொழிலாளர் இயக்கம் 
செயலாளர், சென்னை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் (1934-38)
துணைத் தலைவர், சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கம் (1932-34
துணைத் தலைவர், சென்னை இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் (1937-38)
தலைவர், சென்னை பட்டன் தொழிலாளர் சங்கம் (1936-37) மற்றும் 
பல்வேறு தொழிலாளர் சங்கங்களுடன் தொடர்பு

சமூகப் பணி
செயலாளர், வட சென்னை அரிசன சேவா சங்கம் (1934-35)
பிரசாரகர், சென்னை அரிசன சேவா சங்கம் (1934-35)
செயலாளர், கிராமணிகுல மகாஜன சங்கம் (1934-37)
உறுப்பினர், போலீஸ் கமிஷன் (1976-77)
உறுப்பினர், தமிழ் நாடு அரசு பிற்பட்டோர் நலக் குழு (1968-71)
உறுப்பினர், தமிழ் நாடு அரசு கதர் கைத்தொழில் வாரியம்

எழுத்தாளர் 
தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் (1955-56)
தலைவர், தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர் மாநாடு, சென்னை (1955)
இது வரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

பட்டங்களும் பட்டயங்களும் 
1950இல் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது
1966இல் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூல் சாகித்திய அகாடமியின் பரிசைப் பெற்றுள்ளது
1972இல் ஜனாதிபதியிடம் “பத்மஸ்ரீ” விருது பெற்றார்.
மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம், பாரதி சங்கம் ஆகியவற்றிடம் தமிழ்த் தொண்டிற்காக வெள்ளிக் கேடயங்கள் பெற்றார்.
1976இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தாரால் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் விருதும் வழங்கப் பெற்றன.
1976இல் சென்னையில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் ‘இயற்றமிழ்ச் செல்வம்' என்ற பட்டம் வழங்கப்பெற்றது.
கல்வித் துறையில் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் வகையில் “யுனெஸ்கோ” சார்பில் இவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
‘டாக்டர்’ பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகத்தாலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாலும் வழங்கப் பட்டது (1981-82).
1985இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கப் பட்டது.

சிறை வாசம் 
1928 முதல் 1947 வரை விடுதலைப் போரில் கலந்து கொண்டு, ஆறு முறை சிறைத் தண்டனை பெற்றார். 
ஒரு முறை மத்தியப் பிரதேசத்திலுள்ள அமராவதிச் சிறையில் ஒரு ஆண்டுக் காலம் அடைக்கப்பட்டார்.
தமிழக வடக்கெல்லைக் கிளர்ச்சியைத் தொடங்கி, அதிலே, 1953இல் தணிகையில் ஆறு வாரக் கடுங்காவல் தண்டனை பெற்றார். 
1936இல் சென்னைச் சிறையில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டார்.

காந்தியப் பணி
கதர் வளர்ச்சி, மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய ஆக்கவழிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1984 முதல் கிண்டி காந்தி மண்டப நினைவு ஆலோசனைக் குழுவின் தலைவர்.

தமிழரசுக் கழகம் 
1946 நவம்பரில் தமிழரசுக் கழகம் நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார்.
மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கி 1956இல் தமிழ் மாநிலம் அமையச் செய்தார்.
தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் ( தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் னெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்.
சென்னை மீது ஆந்திரர் உரிமை கொண்டாடியதை எதிர்த்துப் போராடி, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முழக்கம் செய்து, தலைநகரைக் காத்தார்.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்றப் பணி
ஆல்டர்மேன், சென்னை மாநகராட்சி (1948-55)
உறுப்பினர், சட்டமன்ற மேலவை (1952-54)
உறுப்பினர், சட்டமன்றப் பேரவை (1972-78)
தலைவர், சட்டமன்ற மேலவை (1978-86) (அக்.)

நூலக இயக்கம்
நிர்வாகி, சென்னை இராயபுரம் திருவள்ளுவர் வாசக சாலை (1930-32)
செயலாளர், சென்னை தண்டையார்பேட்டை நூலகம் (1941-42)
தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்க நூலகம். 
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு (1952-54 மற்றும்1972-74)
உறுப்பினர், தமிழ்நாடுஅரசு நூலக ஆணைக்குழு நூலக இயக்கத்துக்கென தனித் துறையை நிறுவவும் தனி இயக்குநரை நியமிக்கவும் நூலக வரியை 3 காசிலிருந்து 5 காசுகளாக உயர்த்தவும் அரசைத் தூண்டி அதில் வெற்றி கண்டார்.

பல்கலைக்கழகப் பணிகள்
உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக செனட் சபை (1952-54)
உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு (1972-76)
உறுப்பினர், மதுரைப் பல்கலைக்கழக செனட் சபை (1967-69)
உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் சபை (1978)
உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக செனட் சபை
தலைவர், உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகப் பல்வேறு ஆய்வுக்குழுக்கள்.
சென்னை, மதுரைப் பல்கலைக் கழகங்களின் சார்பில் ஆறு முறை அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் - தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழு உறுப்பினர் (1983-86)

கல்வித் தொண்டு
தலைவர், சென்னை மாநகராட்சி கல்விக் குழு (1952-53)
ஆசிரியர், வடசென்னை முதியோர் ( கள்ளிறக்கும் தொழிலாளர்) கல்வி இரவுப் பள்ளி (1934-36)
வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ஆகிய நூல்கள் தமிழ் நாடு உயர்நிலைப் பள்ளிகளின் மேல் வகுப்புகளில் பாடமாக்கப்பட்டன.
‘கம்பன் கவியின்பம்' என்னும் நூல் மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பட்டப் படிப்புக்குப் பாடமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தால் மேல் பட்டப் படிப்புக்குத் தகவல் நூலாக வைக்கப் பட்டது.
‘பாரதியாரின் பாதையிலே' என்னும் நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் பட்டப் படிப்புக்குப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.

பத்திரிகைப் பணி
கம்பாசிடர், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு' பத்திரிகை அச்சுக்கூடம் (1927-34)
ஆசிரியர், “கிராமணி குலம்” (1934-37) மாதமிருமுறை
ஆசிரியர், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் “பாரதி ” மாதப் பத்திரிகை (1955-56)
ஆசிரியர், “தமிழ் முரசு” (1946-51)
ஆசிரியர், “தமிழன் குரல்” (1954-55)
ஆசிரியர், “செங்கோல்” (1950-1995) 

அயல்நாட்டுப் பயணம்
இலங்கைக்கு 1948இல் முதன் முதலாகச் சென்று 28 நாட்கள் அந்தத் தீவில் சுற்றுலாச் செய்தார். அதன் பின்னரும் 10க்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் சென்று திரும்பியுள்ளார்.
பர்மாவுக்கு 1956இல் சென்று 18 நாட்கள் சுற்றுலா செய்தார்.
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் 1964-லும், 1966-லும் சுற்றுலாச் செய்தார்.
மேற்கண்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையில் கலாச்சாரப் பிரச்சாரம் செய்துள்ளார்.
1965 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும் 1970இல் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளில் தமிழக அரசின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
1970 இல் சோவியத் யூனியனால் அழைக்கப்பட்டு, அந்நாட்டில் 7 நாட்கள் சுற்றுலா செய்தார்.
1970இல் பாரிசில் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு விட்டுத் திரும்புகையில், பிரிட்டனின் தலைநகரான இலண்டனில் 3 நாட்கள் தங்கி, நூலக இயக்கம் – காவல் துறை நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து வந்தார்.
1986ஆம் ஆண்டில் இலண்டன், அமெரிக்கச் சுற்றுப் பயணம் செய்து, வெர்ஜீனியா மாகாணத்தில் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்டார். அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் மூன்று வாரம் சுற்றுப் பயணம் செய்தார். 

தமிழிசைப் பணி
1967 டிசம்பரில், தமிழ்ப்பண் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
1978 டிசம்பரில் சென்னையில் தமிழிசை விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
1982-83 தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மறைவு
1995ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள், சென்னை மயிலாப்பூர்.

http://www.maposi.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.