ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தின் ஆளும் அதிமுகவில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்கிறது. இந்த சூழலில், ஜெயலலிதா இறந்ததிலிருந்து தற்போது வரை அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஏற்பட்ட முக்கிய திருப்பங்களைக் காட்டும் பட்டியல் இது.
டிசம்பர் 5, 2016: இரவு 11.30 மணிக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 6, 2016: இரவு 1.30 மணியளவில் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்.
டிசம்பர் 10, 2016: அ.தி.மு.கவை ஒரு ராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டுசெல்ல சசிகலா இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக வேண்டும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
டிசம்பர் 29, 2016: அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
ஜனவரி 2, 2017: கட்சி ஒருவரிடமும் ஆட்சி ஒருவரிடமும் இருந்தால், சரியாக இயங்க முடியாது என்பதால் சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டுமென அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான தம்பிதுரை தனது துணை சபாநாயகர் பதவிக்கான லெட்டர் பேடில் அறிக்கை விடுத்தார்.
பிப்ரவரி 5, 2017: அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.
பிப்ரவரி 6, 2017: சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
பிப்ரவரி 7, 2017: ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த ஓ. பன்னீர்செல்வம் தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா கடிதத்தைப் பெற்றதாகக் கூறினார்.
பிப்ரவரி 11, 2017: தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுனரைச் சந்திக்க நேரம் கேட்கிறார் சசிகலா. அவர் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்படுகின்றனர்.
பிப்ரவரி 14, 2017: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளியென உச்சநீதிமன்றம் உறுதிசெய்கிறது.
பிப்ரவரி 14, 2017: அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வுசெய்யப்படுகிறார்.
பிப்ரவரி 15, 2017: ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுகின்றனர். டிடிவி தினகரன் உடனடியாக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
பிப்ரவரி 15, 2017: ஜெயலலிதாவின் சமாதியில் சபதம் செய்த பிறகு பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைகிறார் சசிகலா.
மார்ச் 15, 2017: ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக தினகரன் அறிவிப்பு.
மார்ச் 28, 2017: சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் இரு பிரிவுகளும் இரட்டை இலை சின்னத்தையோ, கட்சிப் பெயரையோ பயன்படுத்த முடியாது என அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
ஏப்ரல் 7, 2017: அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரது இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
ஏப்ரல் 10, 2017: ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்துசெய்கிறது தேர்தல் ஆணையம்.
ஏப்ரல் 14, 2017: டிடிவி தினகரன் இல்லத்தில் அமைச்சர்கள் டிடிவி தினகரனுடன் வாக்குவாதம்.
ஏப்ரல் 17, 2017: அமைச்சர் தங்கமணி இல்லத்தில் அனைத்து அமைச்சர்களும்கூடி ஆலோசனை. இரு அணிகளையும் இணைப்பது குறித்துப் பேசியதாக தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 18, 2017: டிடிவி தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தப்போவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 19, 2017: அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவிக்கிறார் டிடிவி தினகரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : நன்றி பிபிசி
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்
0 comments:
Post a Comment
Kindly post a comment.