அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் (வயது 70) அமோக வெற்றி பெற்றார்.
அவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்கிறார்.
அமெரிக்காவின் புதிய அரசில் இந்தியர் பாபி ஜிண்டால் மந்திரி ஆகிறார்?
டிரம்ப் தலைமையிலான புதிய அரசில் பதவி ஏற்க உள்ள மந்திரிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
அந்த வகையில் டிரம்ப் மந்திரிசபையில் இடம்பெறப்போகிறவர்களின் இறுதி பரிசீலனை பட்டியலில், இந்தியரான பாபி ஜிண்டால் (45) பெயர் இடம்பெற்றுள்ளது; இவர் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி ஏற்கலாம் என அங்கிருந்து வெளியாகும் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இவர் 2 முறை லூசியானா மாகாணத்தின் கவர்னர் பதவி வகித்த அனுபவம் மிக்கவர். குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் களம் இறங்கி பின்னர் விலகியவர். ஆரம்பத்தில் இவர் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தபோதும், இன்னொரு போட்டியாளராக விளங்கிய டெட் குரூசுக்கு ஆதரவு அளித்து வந்தபோதும், இவரது பெயர் சுகாதார துறை மந்திரி பதவிக்கு பரிசீலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாபி ஜிண்டால் மந்திரி பதவி ஏற்றால், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் அமெரிக்க மந்திரி என்ற பெயரை பெறுவார்.
நன்றி :- தினத்தந்தி
0 comments:
Post a Comment
Kindly post a comment.