Thursday, November 10, 2016

’கேன்சல்’ செய்யப்படும் ரெயில் டிக்கெட்களுக்கு திருப்பி வழங்கப்படும் பணம் ரொக்கத்தில் கிடையாது !



ரெயில் டிக்கெட்டை ’கேன்சல்’  செய்தால் திருப்பி வழங்கப்படும் பணம் (ரீஃபண்ட்) ரொக்கத்தில் வழங்கப்படாது என்று ரெயில்வே அறிவித்து உள்ளது.

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதாகவும் செவ்வாய்கிழமை அறிவித்தது. இருப்பினும், 72 மணி நேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவு வரையில் சில இடங்களில் இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது. மருத்துவமனைகள், மருந்து கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள்,* ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள்,  பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள், உடல் எரியூட்டும் இடம், கூட்டுறவு சங்கங்கள், மாநில அரசு நடத்தும் பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிப்பை அடுத்து பொதுமக்கள் தங்கள் கையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முயற்சித்தனர். இதனால் ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கும் இடங்களில் கூட்டம் குவிந்தது. அனைவரும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து டிக்கெட்களை வாங்கினர். மீதி தொகை அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்நடவடிக்கை காரணமாக மாற்று நோட்டுகள் இல்லாமையால் டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு பணம் திருப்பி அளிப்பதில் ரெயில்வேயிற்கு சிரமம் ஏற்பட்டு உள்ள்து.

இதனையடுத்து முன்பதிவு ரெயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ரொக்க ரீஃபண்ட் கிடையாது என்று ரெயில்வே அறிவித்து உள்ளது. மாறாக ரெயில்வே டிக்கெட் டெபாசிட் ரசீதுகளை (TDR) வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் டிக்கெட்கள் கேன்சல் செய்யப்படுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தரப்படவேண்டிய தொகையானது ரூ.10,000 மற்றும் அதற்கு மேல் என்றால் வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவெடுத்து உள்ள ரெயில்வே நிர்வாகம், இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறிஉள்ளது. மத்திய அரசு அறிவிப்பை அடுத்து முன்பதிவு உள்ளிட்ட ரெயில்வே கவுண்டர்களில் மக்கள் கூட்ட நெரிசல் கண்டது. இதனையடுத்து மற்ற நோட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

“ டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு டி.டி.ஆர். என்ற ரசீதுகளை வழங்கி வருகிறோம், திருப்பி அளிக்கப்பட வேண்டிய தொகை  ரூ.10,000 மற்றும் அதற்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கிறோம்” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

500, 1000 ரூபாய் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து ஆன்-லைன் மூலம் ரெயிலில் டிக்கெட் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது. 9-ம் தேதியில் ரெயில் டிக்கெட் முன்பதிவானது, அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பீடுகையில் 10 சதவிதம் வரையில் குறைந்து உள்ளது. இதற்கிடையே ரெயில்வே கவுண்டர்கள் மூலமான ரெயில் டிக்கெட் விற்பனையானது 13 சதவிதம் உயர்ந்து உள்ளது. ஐஆர்சிடிசி தகவலின்படி அக்டோபர் 8- தேதி 5,55,587 இ-டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாறாக 9- தேதி 5,07,996 இ-டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரெயில்வே கவுண்டர்களில் 9-ம் தேதி ரெயில் டிக்கெட் பதிவு அதிகரித்து உள்ளது. 

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.