Tuesday, November 8, 2016

12 டாலருக்கு கூகுள்.காம் இணையதளத்தை விலைக்கு வாங்கி ரூ.8 லட்சம் பரிசு பெற்ற இந்திய நபர் !

12 டாலருக்கு கூகுள்.காம் இணையதளத்தை விலைக்கு வாங்கி ரூ.8 லட்சம் பரிசு பெற்ற இந்திய நபர்




கலிபோர்னியா : ஒரு நிமிடத்திற்கு கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளராக இருந்த இந்தியருக்கு கூகுள் நிறுவனம் ரூ. 8 லட்சம் பரிசாக வழங்கியது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மந்த்வி பகுதியை சேர்ந்த சான்மே வேத் என்பவர், கூகுள்.காம் இணையதளத்தை விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் எம்பிஏ படித்து வரும் இவர், இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர் ஆவார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் டொமைன்ஸ் சென்று புதிதாக ஏதாவது இணைய முகவரிகள் விற்பனைக்கு இருக்கிறதா என்று பார்த்துள்ளார். அப்போது, ‘கூகுள்.காம் விற்பனைக்கு’ என்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். கூகுள்.காம் ஏற்கெனவே இருப்பதால், அந்த இணைய முகவரி விற்பனைக்கு இல்லை என்ற செய்தி வரும் என்று சான்மே வேத் எதிர்பார்த்தார்.ஆனால் ‘கூகுள்.காம்’ முகவரியை வாங்கலாம். பணத்தை செலுத்துங்கள் என்று தகவல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த வேத், உடனடியாக கிரெடிட் கார்டு விவரங்களை டைப் செய்து உடனடியாக பணம் செலுத்தினார். வெறும் 12 டாலருக்கு உடனடியாக கூகுள்.காம் இணைய முகவரி சான்மே வேத் பெயருக்கு மாறி விட்டது.

இணைய உலகில் கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்படும் கூகுள்.காம் இணைய முகவரிக்கு உரிமையாளரானதை அவரால் நம்பவே முடியவில்லை. ஆனால் ஒரு நிமிடம் கழித்து கூகுள் டொமைன்ஸ் ஒரு தகவல் அனுப்பியது. அதில், ‘சான்மே வேத்தின் ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. அந்த முகவரி ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து வேத் தன்னுடைய லிங்குடு. இன் பக்கத்தில், ‘‘தொழில்நுட்ப கோளாறு இருந்திருக்கலாம். அதனால் நான் கேட்டதும் கூகுள்.காம் எனக்கு விற்கப்பட்டிருக்கலாம். கூகுள் முகவரியை அந்த நிறுவனம் புதுப்பிக்கவும் தவறியிருக்கலாம்’’ என்று அவர் கூறிள்ளார்.

இதற்கிடையில், ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த சான்மே வேத்துக்கு பரிசாக ரூ.4.07 லட்சம் வழங்கியது. அந்த பணத்தை ‘ஆர்ட் ஆப் லிவிங் இண்டியா பவுண்டேஷன்’ அறக்கட்டளைக்கு வழங்குவதாக வேத் அறிவித்தார். இதையடுத்து பரிசு தொகையை கூகுள் நிறுவனம் இரண்டு மடங்காக்கி அறிவித்தது. மொத்தம் 8 லட்சம் ரூபாய் சான்மே வேத்துக்கு கிடைத்தது. இந்த தொகையை இந்தியாவில் 18 மாநிலங்களில் 404 இலவச பள்ளிகளை நடத்தி வரும் ‘ஆர்ட் ஆப் லிவிங்’ அறக்கட்டளைக்கு வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=193443

0 comments:

Post a Comment

Kindly post a comment.