
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ஆய்வரங்குகளுக்கான கட்டுரைத் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டுரைகள் கிடைக்கப்பெறும் இறுதித்தினமாக செப்டம்பர் 30ம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டுரைகளை எழுதுவதற்கும் தேச, இன வரம்புகளில்லை. கட்டுரைகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.
01. தற்கால இலக்கியம்
------------------------------ ------------
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. முஸ்லிம் படைப்பாளிகளின் வலைத்தளப்பதிவுகள்
02. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைச்செல்நெறி
03. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைச்செல்நெறி
04. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் நாவல்களும் பேசுபொருளும்
05. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசு பொருளும்
02. இஸ்லாமும் கலைகளும்
------------------------------ ------------------
கட்டுரைத்தலைப்புக்கள்.
01. இலங்கை முஸ்லிம்களின் இசையும் கலைப்பாரம்பரியமும்
02. இலங்கையில் அருகி வரும் முஸ்லிம் பாரம்பரியக் கலை வடிவங்கள்
03. இறைதூதர் காலத்தில் இசையும் கலையும்
04. அடிப்படைவாதச் சிந்தனையும் இஸ்லாமிய இசையும்
05. கஸீதா, புர்தா, தலைப் பாத்திஹா ஆகியவற்றில் இலக்கிய நயம்
06. இஸ்லாமியர் மத்தியில் இசை பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்
03. சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்
------------------------------ ------------------------------ ------------------------
கட்டுரைத்தலைப்புக்கள்.
01.) சினிமா ரசனை பற்றிய எண்ணக்கரு
02) இஸ்லாமியக் கருத்தியலை முன்கொண்டுச் செல்ல சினிமா ஊடகத்தின் பங்களிப்பு
03) சினிமா தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் கருத்தியல்சார் பிரச்சினைகள்
04) சினிமா மூலம் இஸ்லாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்
05) சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை
06.) மாற்றுச் சினிமாவுக்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்
04. எதிரெழுத்து
------------------------------ ---
கட்டுரைத்தலைப்புக்கள்.
01) முஸ்லிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்
02) முஸ்லிம்களின் எதிர்க்குரல் சர்வதேசத்துக்கு எட்டாமைக்கான காரணிகள்
03) மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் – சமூக அரசியல் பரிமாணம்
04) சியோனிஸ சக்திகளுக்கெதிரான இஸ்லாமிய எதிர்ப்பிலக்கியம்
05. இஸ்லாமிய தீவிரவாதம் – ஓர் ஆய்வு
05. வாழும் ஆளுமைகள்
------------------------------ -----------
கவனத்தைக் கவர்ந்த தற்கால முஸ்லிம் படைப்பாளிகள் (ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)
01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்
02) அவர்களது சமூகவியற்பார்வை
03) அவர்களது எழுத்துக்களில் இலக்கிய நயம்
04) அவர்களது எழுத்துக்களில் சமூக, இன நல்லுறவு 05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் விதம்
06. சமூக நல்லிணக்கம்
------------------------------ ------------
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) சமய இலக்கியங்களில் சமூக நல்லிணக்கம்
02) இன உறவைக் கட்டியெழுப்புவதில் இலக்கியத்தின் பங்களிப்பு
03) தமிழ் பேசும் மக்கள் – ஓர் இலக்கியப்பார்வை
04) மலையக இலக்கியப்பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்
05) இஸ்லாமும் இலக்கியமும் – இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் புரிதலும்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
0 comments:
Post a Comment
Kindly post a comment.