Tuesday, August 30, 2016

பிணைப்பை வலுப்படுத்தும் மூத்தோர் சமையலறைத் திட்டம் !



மூத்த குடிமக்கள் தங்களைப் போன்ற மற்ற மூத்த குடிமக்களு டன் பழகி தங்களுக்கிடையே வலு வான உறவை ஏற்படுத்திக் கொள் வதற்கும் பலமான சமூக ஆதரவுக் கட்டமைப்பை வளர்த்துக் கொள்வ தற்கும் ஒரு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ‘தி ஹவர் கிளாஸ்’ நிறுவனமும் தேசிய சமூக சேவைகள் மன்றமும் உருவாக்கி உள்ள ‘தி ஹவர் கிளாஸ் சமையலறைத் திட்டம்’ எனும் இதனை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த முதலாவது திட்டத்தை ஏற்று நடத்த ‘தி ஹவர் கிளாஸ்’ சமூக உண்டியலுக்கு $2 மில்லி யனை வழங்கியது. அதற்கு வெள்ளிக்கு வெள்ளி ஈடு கொடுக் கும் வகையில் ‘கேர் அண்ட் ஷேர்’ இயக்கம் மேலும் $2 மில்லியனை அத்தொகையுடன் சேர்த்துள்ளது.

இத்திட்டத்தில் சேரும் மூத்த குடிமக்களுக்காக யீ‌ஷூன் அவென்யூ 9ல் அமைந்துள்ள பசிபிக் நடவடிக்கை நிலையத்தின் யீ‌ஷூன் கிரீன்வாக் கிளையில் ‘ஹலால்’, ‘ஹலால் அற்ற’ எனும் இரு சமையலறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. சமையலறைகளில் வழங்கப் படும் சமையல் வகுப்புகளில் பங் கேற்கும் முதியவர்கள் தங்களுக்குப் பிடித்த உணவு வகை களைச் சமைத்துப் பார்க்கலாம். மேலும் குழுவில் உள்ள மற்றவர்களுடன் ‘இன்று என்ன சமைக் கலாம்’ என்று கலந்து பேசலாம்; சமைத்த பிறகு அவர்களுடன் சேர்ந்து சிறு குழுக்களாக உணவு உண்ணலாம்.

யீ‌ஷூனில் உள்ள பசிபிக் நடவடிக்கை நிலையத்தில் ‘தி ஹவர் கிளாஸ்’ சமையலறைத் திட்டத்தின் மூத்த பங்கேற்பாளர் திருமதி பத்திமா அர்ஷாட்டின் மேற்பார்வையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், ‘தி ஹவர் கிளாஸ்’ நிறுவனத் தலைவர் டாக்டர் ஹென்றி டே ஆகியோர் ‘நாசி லெமாக்’ எனும் மலாய் உணவைத் தயாரிக்கின்றனர். வலக்கோடியில் பசிபிக் நடவடிக்கை நிலையங்களின் நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் வில்லியம் சோங் உள்ளார். படம்: சிங்கப்பூர் சமூக சேவை மன்றம்

நன்றி :- தமிழ் முரசு, சிங்கப்பூர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.