Friday, November 6, 2015

ரசாயனம் கலப்பதாக புகார்: டாஸ்மாக் மதுபானங்களை ஆய்வு செய்ய கோரிக்கை- தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்



கோப்புப் படம்: ஷேக் மைதீன்

டாஸ்மாக் மதுபானங்களை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பொதுநல வழக்கு மைய ஒருங்கிணைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த சீராய்வு மனு:

தமிழகத்தில் டாஸ்மாக் கடை களில் விற்கப்படும் மதுபானங் களில் போதைக்காக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் அதிகள வில் கலக்கப்படுகின்றன. இந்த மதுபானங்களை தொடர்ந்து குடிப்பதால் மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், பாலின உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. பலர் தற்கொலை செய்து கொள் கின்றனர். விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. பல குடும்பங் கள் தெருவுக்கு வந்துள்ளன.

நிபுணர் குழு அமைத்து டாஸ்மாக் மதுபானங்கள் அருந்து வதற்கு தகுதியானதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி நான் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற கிளை 17.8.2015-ல் தள்ளுபடி செய்தது.

இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை முதல் அமர்வு தள்ளுபடி செய்திருப்பதாக அரசு தரப்பில் கூறியதைக் கேட்டு இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அந்த மனுவில் கேட்கப்பட்ட நிவாரணம் வேறு. நான் கேட்ட நிவாரணம் வேறு.

குற்றங்களுக்குக் காரணம்

மதுபானத்தால் லட்சக்கணக்கான பள்ளிச்சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் பாதிக்கப் படுவதையும், இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாடுவதை யும் நீதிபதிகள் கவனிக்கவில்லை. பல்வேறு குற்றங்களுக்கு மது பானம் முக்கிய காரணமாக உள்ளது.

மதுபானங்களின் தரத்தை சோதனை செய்வதால் ஏராளமா னோரின் உயிர்களை காப்பாற்ற முடியும். எனது மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்து டாஸ்மாக் மதுபானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு உள்துறை, சுகாதாரத் துறை, இந்திய தரக்கட்டுப்பாட்டுச் செயலர் மற்றும் அதிகாரிகள் 3 வாரத்தில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போதைக்காக ரசாயனம் கலக்கப்பப்பட்ட மதுபானங்களை குடிப்பதால் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.