Sunday, November 15, 2015

பத்ரி சேஷாத்ரி கற்றுக்கொடுத்த பாடம் ! மேலும் ஓர் பிரச்சினை !

பத்ரி சேஷாத்ரி

WEDNESDAY, SEPTEMBER 30, 2015


டிக்கெட் முன்பதிவு + மின் ரயில் பயணம்

சில ஆண்டுகளுக்குமுன் கிண்டி ரயில்வே நிலையத்தில் எனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை குறித்து எழுதியிருந்தேன்.

ரயில் டிக்கெட் வித்தவுட்


கோவில்பட்டியிலிருந்து சென்னை பயணம். எழும்பூர் வரை முன்பதிவு செய்த டிக்கெட் என்னிடம் இருந்தது. என் வீடு அப்போது கிண்டியில். எனவே தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி கிண்டி வந்து சேர்ந்தேன். டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்து, தாம்பரம் முதல் கிண்டி வருவதற்கான முறையான டிக்கெட் இல்லை என்பதால் அபராதம் விதித்தார். அப்போதுதான் நான் செய்வது ரயில்வே விதிமுறைகளின்படித் தவறானது என்று எனக்குத் தெரியவந்தது.

ஆனாலும் இதில் உள்ள நடைமுறைப் பிரச்னை, பயணிகளின் அசௌகரியம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ரயில்வே அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அவ்வாறு எழுதப்போவதாகச் சொன்னபோது பலரும் கேலி செய்தனர் என்பது வேறு விஷயம்! என்னைப் போலவே ஏகப்பட்ட பேர் புகார் செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

30/7/2015 அன்று ரயில்வே நிர்வாகம் விதியை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்கவேண்டியதில்லை.

ஆர்.டி.ஐ செய்து தகவல் பெற்றுத்தந்த பாலாஜிக்கு நன்றி. ரயில்வேயிலிருந்து வந்துள்ள கடிதத்தை இத்துடன் இணைக்கிறேன். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதி என் கவனத்தை ஈர்த்த “பிச்சைக்கார”னுக்கு நன்றி.






1973-1974-ஆம்  ஆண்டுகளில்  கோவையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு
டிக்கட் எடுத்துக்கொண்டு  அடிக்கடி  பயணித்திருக்கின்றேன்.  சென்டரல் / பெரம்பூர்  சென்றுவிட்டு மீண்டும் டிக்கட் எடுத்து  அம்பத்தூர்  வரவேண்டும்..  அதற்குப்பதிலாக  அரக்கோணம் / திருவள்ளூர் / ஆவடி  வண்டி நிற்கும் வசதிகளுக்கேற்ப  அந்தந்த  இடத்தில் இறங்கி , வாங்கிய  டிக்கட்டிலேயே  அம்பத்தூருக்கு  வந்துவிடுவேன். பெங்களூர் / மும்பை சென்று திரும்பும் போதும் இதுபோன்று சிலதடவைகள்  பயணித்திருக்கின்றேன். சட்டப்படி அது தவறு என்பதும்,  30-07-2015 முதல் ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ள  சட்டப்படி அது  தவறில்லை  சரியானதே  என்பதையும் தெரிந்து கொண்டேன்.  அறியச் செய்த பத்ரிக்கு நன்றி.  http://www.badriseshadri.in/

----------------------------------------------------------------------------------------------------------------------------

இப்போது  ஒரு  பிரச்சினை. 

  சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை  எழும்பூரிலிருந்து  சங்கரன்கோவிலுக்கு பொதிகையில்  டிக்கட் எடுத்துப் பயணம் செய்கின்றேன். ஏ..சி. இரண்டாம்  வகுப்பு.  சங்கரன்கோவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது.   சங்கரன் கோவிலில் இறங்காமல் நேரடியாகத்  தென்காசி  செல்லலாம்  என்று  பயணத்தில்  ஒரு  மாற்றம்  செய்து கொண்டேன். சங்கரன் கோவிலிலிருந்து  தென்காசிவரை மட்டும்தான் டிக்கட் எடுக்கவேண்டும் என்பது எனது எண்ணம். அதேபோன்று ரெயில்வேயில் முன்னர் வசதி இருந்தது. ஆனால் டிக்கட் பரிசோதகர் தற்போது சட்டம்  நடைமுறையில் இல்லை. மாறிவிட்டது. நீங்கள்  மீண்டும்  சென்னை  எழும்பூரிலிருந்து  தென்காசி வரைக்கான  கட்டணத்தைச்  செலுத்தியே  ஆகவேண்டும். என்றார். அதாவது கட்டணம்  இருமடங்கு.  இதற்குக் கடிதம்  எழுதவேண்டும் என்றிருந்தேன். இன்றுவரை அதைச் செய்யவில்லை.

வேறுவழியின்றி  கைவசம் உள்ள டிக்கட்டின்படி  சங்கரன்கோவிலிலேயே  இறங்கிக்கொண்டேன்.

சங்கரன்கோவிலுக்கு அப்புறம் தென்காசியில்தான்  வண்டி நிற்கும். சில கி.மீ.கள்தான்.  இது என்ன சட்டம். ? பரிசோதகர்  சொன்னது  சரிதானா?  வலுவான  மீடியத்தில் உள்ள பத்ரியார்  இதற்கு ஓர் வழி செய்யவேண்டும்..

----------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

Kindly post a comment.